உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டேன்: டிரம்ப் உறுதி

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டேன்: டிரம்ப் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்:தென்னாப்பிரிக்காவில் நவம்பர் இறுதியில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவம்பர் 22,23 ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாடு, முதல் முறையாக ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த மாநாட்டில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும், தனக்கு பதிலாக துணை அதிபர் ஜேடி வான்ஸ் கலந்து கொள்வார் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.இது குறித்து புளோரிடாவில் நடந்த அமெரிக்க வணிக மன்ற மியாமியில் டிரம்ப் பேசியதாவது:தென்னாப்ரிக்காவில் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்.ஜி20 இல் தென்னாப்பிரிக்காவின் இடம் குறித்து எனக்கு உடன்பாடில்லை. அங்கு எதிர்மறையான சூழ்நிலையையும், நில சீர்திருத்தம் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் வழக்கு போன்ற பிரச்சினைகள் தொடர்பாக ராஜதந்திர உறவுகளை சீர்குலைத்தது.இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போதுதான் ஆப்பிரிக்க ஒன்றியம் குழுவில் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் கம்யூனிச கொடுங்கோன்மையிலிருந்து தப்பி ஓடும் மக்களுக்கு மியாமி நீண்ட காலமாக ஒரு புகலிடமாக இருந்து வருகிறது.டிசம்பர் 1, 2025 அன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து ஜி20 தலைமைப் பொறுப்பை அமெரிக்கா எடுத்துக் கொள்ளும், மேலும் நவம்பர் 30, 2026 வரை குழுவிற்குத் தலைமை தாங்கும்.இவ்வாறு டிரம்ப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Raj
நவ 06, 2025 18:09

ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன் என்று உறுதியாக இருப்பவர், தலைமை பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று உறுதி செய்யவேண்டியது தானே.


Saai Sundharamurthy AVK
நவ 06, 2025 17:48

இப்படி சொன்னால் தான் மோடி அங்கு வருவார் என்று கணக்கு போட்டிருப்பார். ஆக, கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொண்டு மோடியுடன் பேசப் போகிறேன் என்று கூறி வந்து விட்டு வந்த இடத்தில் ஒரு ட்ராமா செய்து விடுவார். ஆனால், மோடிஜியும் லேசுப்பட்டவர் கிடையாது. கேடிக்கு கேடியாக இருப்பாரே !!!!


Sun
நவ 06, 2025 17:20

இவர் கலந்து கொள்ள மாட்டேன்னு டிரம்ப் இப்ப சொன்னார்னா கலந்து கொள்ளப் போறார்னு அர்த்தம். மோடி போன்ற வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள முடிவெடுத்த பின்பு திடுதிப்பென அங்கு வந்து நின்று அள்ளி விடுவார். மாநாட்டுக்கு முதல் நாள் வரை இவர் சொல்வதை நம்ப முடியாது! குட்டி நாடுகளின் தலைவர்களைக் கூட நம்பலாம். இன்றைய உலகின் நம்பர் ஒன் நம்பகமற்ற தலைவர் டொனால்ட் டிரம்ப்.


என்றும் இந்தியன்
நவ 06, 2025 17:19

குழந்தாய் நீ அங்கே போகாதே அப்போது தான் ஜி20 மாநாடு மிக நன்றாக நடக்கும் நல்ல முடிவு எடுப்பார்கள்.


Palanisamy Sekar
நவ 06, 2025 16:18

பொதுவாகவே ட்ரம்பிற்கு உலக தலைவர்களிடையே மட்டுமல்ல, மக்களிடையே கூட மதிப்பே இல்லை என்பதால் கூட செல்லுவதற்கு அச்சப்படநேரிடுகின்றதோ தெரியவில்லை. ரிட்டயரானஅதிபரை எப்படி அமெரிக்க மக்கள் தேர்வு செய்தார்களோ தெரியல. அனுபவிபப்து எல்லோரும்தான்


Indian
நவ 06, 2025 16:07

நல்ல முடிவு . போக கூடாது


V K
நவ 06, 2025 16:00

தாத்தா நீ அங்கே போக வேண்டாம் நீ அமெரிக்காவில் உட்கார்ந்து வரி வசூல் பண்ணு இன்னும் பாகிஸ்தானுக்கு இன்னும் வரி போடவில்லை பார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை