உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிபர் தேர்தலில் வெற்றி; வரலாறு படைத்தார் டிரம்ப்!

அதிபர் தேர்தலில் வெற்றி; வரலாறு படைத்தார் டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி, டிரம்ப் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். அதிபராக இருந்தவர், அடுத்த தேர்தலில் தோற்று, மூன்றாம் முறை மீண்டும் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். உலகின் பல நாடுகளில் தேர்தல் நடந்தாலும் அமெரிக்க அதிபர் தேர்தல் எப்போதுமே ஸ்பெஷல். இம்முறை நடைபெற்ற அதிபர் தேர்தல் கடந்தகால தேர்தல்களின் போது நிகழ்ந்த பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் தான் இருக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5ghw0uiz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நடப்பு தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர், முன்னாள் அதிபர் டிரம்ப், ஜனநாயகக்கட்சி வேட்பாளர், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையேதான் போட்டி. ஓட்டுப்பதிவு முடிந்து முடிவுகள் கொஞ்சம், கொஞ்சமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.அந்நாட்டில் உள்ள 50 மாகாணங்களில் உள்ள 538 பிரதிநிதிகளில் 270 பேர் ஆதரவு பெறும் வேட்பாளர் தேர்தலில் அதிபராக வெற்றி பெற முடியும். தொடக்கம் முதலே டிரம்ப் அபரிமிதமான முன்னிலையில் இருந்தார். கடிகார முள்ளின் வேகம் நகர, நகர முன்னிலை நிலவரத்தில் வித்தியாசம் இருந்ததே தவிர வேறு முக்கிய மாற்றங்கள் காணப்படவில்லை. தேர்தல் முடிவு வெளியான நிமிடத்தில் இருந்தே டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். தேர்தலுக்கு முன்னரே டிரம்ப், கமலா ஹாரிஸ் இடையே உள்ள போட்டி குறித்து கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அதில் கமலா ஹாரிசுக்கு 48 சதவீதம் மக்கள் ஆதரவாக இருக்கின்றனர் என்றும், டிரம்புக்கு மக்கள் ஆதரவு 44 சதவீதம் உள்ளது என்றும் கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க நிலைமை மாறியது. தனக்கு எதிரான பல்வேறு எதிர்மறை விவகாரங்களையும் பின்னுக்குத் தள்ளி டிரம்ப் முன்னிலைக்கு வந்து விட்டதாக கணிப்புகள் வெளியாகின. தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக கூட பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ், 'டிரம்ப் அதிபர் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர்' என்று செய்தி வெளியிட்டது. இன்னொரு பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட், கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு தெரிவிக்க இருந்ததாகவும், அதை அந்த பத்திரிகையின் உரிமையாளர் நிறுத்தி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இப்படி பல்வேறு எதிர்மறை தகவல்கள் வெளியான நிலையிலும், வாக்காளர்கள் மனதில் இடம் பிடித்து டிரம்ப் கூடுதல் ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். தற்போது எண்ணப்பட்டது வரை, மொத்தம் 50 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகளை அவர், கமலாவை காட்டிலும் கூடுதலாக பெற்றுள்ளார். தற்போது வரை டிரம்ப் 277 எலக்ட்ரோல் காலேஜ் ஓட்டுகளையும், கமலா 226 ஓட்டுகளையும் பெற்றுள்ளனர். இன்னும் டிரம்ப் வெற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் கமலா ஹாரீஸ் கனவு, பகற்கனவாகி விட்டது உறுதி செய்யப்பட்டு விட்டது. இன்னும் சற்று நேரத்தில் டிரம்ப் நாட்டு மக்கள் மத்தியில் வெற்றி உரையாற்றுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 74 )

Ramesh Sargam
நவ 07, 2024 19:59

ட்ரம்ப் என்றாலே பிரச்சினைகள்தான். ஆரம்பித்தது முதல் பிரச்சினை. என்ன அது? ”ட்ரம்ப் தான் எனது தந்தை” - வைரலாகும் பாகிஸ்தான் இளம்பெண் பேசிய வீடியோ உண்மை என்ன?


Suresh Viggi
நவ 07, 2024 13:12

Congratulations டிரம்ப் ji


Narayanan
நவ 07, 2024 12:14

அமெரிக்காவிலும் அனுதாப ஓட்டு கிடைத்திருக்கிறது . இரண்டுதடவை துப்பாக்கி சூடு ட்ரம்பின் மேல் விழுந்தது . அது இப்படி அனுதாப ஓட்டாக மாறி இருக்கிறது .


Saai Sundharamurthy AVK
நவ 06, 2024 22:37

உலக அரசியலில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் எதிர்காலம் கேள்விக்குறி !! ஈரானின் எதிர்காலம் பிரச்சினையாகும். அடாவடித்தனமாக பதவியேற்ற வங்கதேசத்தின் முஹம்மது யூனிஸின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும். பொறுத்திருந்து பாருங்கள் !


Saai Sundharamurthy AVK
நவ 06, 2024 23:27

பிரச்சினைக்கு உள்ளாகப் போகும் தலைவர்களில் கனடா அதிபர் ஜஸ்டின் டுருடோவையும் இணைத்துக் கொள்ளலாம்....!


RAMAKRISHNAN NATESAN
நவ 06, 2024 21:46

யார் ஜனாதிபதி ஆனாலும் அமெரிக்காவின் அடிப்படைக் கொள்கைகள் மாற வாய்ப்பில்லை ..... எதிலும் அமெரிக்காவுக்கு எது நல்லது என்று பார்த்தே முடிவெடுப்பார்கள் .....


Srinivasan K
நவ 07, 2024 11:43

for that Trump will not follow dangerous policies of democratic party creating wars, encouraging terrorism, planting trouble on other nations, blocking their development Trump will not do this and he won't support china this is good for india any American can not change this until Trump is in power. Trump cannot be manipulated by deep state


வல்லவன்
நவ 06, 2024 21:41

தன்னம்பிக்கையின் மறுபெயர் டிரம்ப். துப்பாக்கி குண்டு காது மடலில் உரசி மரணத்தின் வாயிலை தொட்டவர். கரணம் தப்மினால் மரணம். அதில் மீண்டு பல்வேறு வழக்குகளில் மீண்டு பொய் புகார் நஷ்டஈடு இன்னும் பல பிரச்சனைகளை சந்தித்து இன்று அடைந்திருக்கும் வெற்றி ஒரு வரலாறு. முக்கியமாக இறை நம்பிக்கை மிக்கவர். நம்மவர்கள் அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன. எல்லாவற்றிற்கும் மேல் ஒரு சக்தி உள்ளது. அறிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சிக்கு Donald Trump ஓர் நல்ல உதாரணம்


Rpalnivelu
நவ 06, 2024 21:07

அவங்க கூவுரான்களோ இல்ல அங்க பிரதட்சணம் பண்றங்களோ, அத விடுங்க. பாஷா பாய் நீங்க ஏன் திருட்டு மாடலுக்கு இப்டி ஜின் சக் போடுறீங்க? கொடுக்குற காசுக்கு மேல கூவுனாலும் பிரயோஜனமில்ல


Velan Iyengaar
நவ 06, 2024 20:54

அடையாறு வென்றது .,.... பெசன்ட் நகர் தோற்றது ....தான் ஹா


Ganapathy
நவ 06, 2024 20:47

அதானே நாங்க "திருட்டுரயில், எலிக்கறி கஞ்சித்தொட்டி புகழ்" கருணாநிதி ஸமாதீல தயிர்வடை படையல் வச்சு பஜனை பண்ணுறது யாருக்காவது தெரிஞ்சுசிருச்சோன்னு நினச்சோம்.


Saai Sundharamurthy AVK
நவ 06, 2024 20:43

ஒரு திராவிட - காங்கிரஸ் - கம்முனிஸ்ட்காரர்கள் யாராவது முந்திக் கொண்டு டிரம்புக்கு வாழ்த்து கூறினார்களா ??? இதிலிருந்தே தெரியவில்லையா ?? இவர்கள் எப்படிப்பட்ட பேர்வழிகள் என்று !!!


சமீபத்திய செய்தி