உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப்-புடின் 3 மணி நேர பேச்சு; முடிவு எட்டப்படாமல் நிறைவு

டிரம்ப்-புடின் 3 மணி நேர பேச்சு; முடிவு எட்டப்படாமல் நிறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அலாஸ்கா: அலாஸ்காவில் உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புடினும் 3 மணி நேரமாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். ''பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை நல்ல தொடக்கமாக அமைந்தது'' என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.' உக்ரைனுக்கு எதிராக, 2022ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா போரை துவக்கியது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் உக்ரைன் - -ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர ஆர்வம் காட்டி வரும் டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினுடன் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3qun2dic&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்பின் சிறப்பு துாதர் ஸ்டீவ் விட்காப் உடன், ரஷ்ய அதிபர் புடின் சந்திப்புக்கு பின், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க ரஷ்ய அதிபர் புடின் ஒப்புக் கொண்டார். அதன்படி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் டிரம்ப் - புடின் இன்று (ஆக.16) சந்தித்து பேச்சு நடத்த திட்டமிடப்பட்டது.

3 மணி நேர பேச்சு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திப்பதற்காக தனி விமானத்தில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை தந்தார். தொடர்ந்து அதே பகுதிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் தனி விமானத்தில் வந்திறங்கினார். முதலில் விளாடிமிர் புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இவரும் பரஸ்பரம் கைகுலுக்கினர். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரின் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதன் பின்னர் இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். தொடர்ந்து இருவரும் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். ''இரு நாட்டு தலைவர்களும் உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இந்த சந்திப்பின் போது எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாக போவதில்லை என்று ரஷ்யாவின் க்ரெம்ளின் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் -புடின்

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை முடிந்ததை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப்- ரஷ்ய அதிபர் புடின் இருவரும் மீண்டும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது புடின் கூறியதாவது: எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் நேட்டோவையும், ஜெலன்ஸ்கியையும் அழைத்து பேசுவேன். அடுத்த சந்திப்பு மாஸ்கோவில் நடைபெறும், என்றார்.

முடிவு எட்டப்படவில்லை

அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: புடினுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ரஷ்யா- உக்ரைன் போர் தொடரும் நிலையில் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. முடிவு எட்டப்பாவிட்டாலும் பேச்சுவார்த்தை நல்ல தொடக்கமாக அமைந்தது. வெளிப்படையாக பேசினோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sankar
ஆக 16, 2025 11:19

அமரிக்க அதிபர் தேவை இல்லாமல் மூக்கை நுழைகிறார் - சூர்ப்பனகை ஆவது நிச்சயம்


Veeraputhiran Balasubramoniam
ஆக 16, 2025 10:07

டிரம்ப் நேட்டோ விஷயத்தில் ஆசிய கண்டத்தில் இடம் பிடைக்க மாட்டோம் என்றால் உலகமே அமைதி ஆகிவிடும். அமெரிக்கா நாட்டாமை பெரியண்ணன் வேலை விட்டு அவங்க நாட்ட காப்பாத்த மட்டும் முயற்சி செய்தாலே உலகம் அமைதி பெறும் அவரவர் நாட்டை அவர்ரவர் பார்த்து கொள்வார்... இது சிந்தூர் விவகாரம் தெளிவுபடுத்தி விட்டது யாரிடமும் கேகாமல் மோடி முடிவு எடுத்து இந்தியாவை பாதுகாக்க என்ன செய்ய வேண்டூமோ அதனை 4 நாள்களீல் முடித்து விட்டு. இனி பேசுவோம் என்றார்.. இன்று அமைதியாக இருக்கிறான் பாக்கிஸ்தான். அவனையும் சீனா அமெரிக்க குத்தி குத்தி தூண்டி விடாமல், ஆயுத உதவி செய்யாமல் இருந்தாலே பாகிஸ்தானும் அமைதியாக் கூச்சல் கூட போட வாய் திறக்க மாட்டான்.. முதலை ட்ர்ம்ப் நாட்டாமை செய்தால் யாரும் ஏர்க்க போவது இல்லை என்பது இன்றய காலத்தின் நிலமை என்பதனை உணர்வேண்டூம் அது தான் அமெரிக்காவுக்கும் அமெரிக்க மக்களுக்கும் நலன் பயக்கும்


Barakat Ali
ஆக 16, 2025 09:23

அப்போ டிரம்புக்கு இப்போதைக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதா ????


சண்டையன்
ஆக 16, 2025 09:21

போர் நிக்கக் கூடாதுன்னு நிறைய நாடுகள் பிரார்த்தனை செய்தார்கள். புட்டின் அவர்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினார்.


Kasimani Baskaran
ஆக 16, 2025 07:21

வாய்ப்பு மிகக்குறைவு. உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் சேர்வதை தவிர்த்தால் ஒருவேளை போர் நிறுத்தப்படலாம். ஒரு சிறிய பகுதிக்குள் இருந்து கொண்டு நாங்கள் வைத்து இருக்கும் அணுகுண்டுகளை ருஷ்யா நோக்கி வைத்தால் ருஷ்யா பயந்துவிடும் என்று நினைப்பது பேதைமை. மிகப்பெரிய நிலப்பரப்பை உடைய ருஷ்யா அவ்வளவு எளிதாக பிடிக்கக்கூடிய நாடு அல்ல.


நிக்கோல்தாம்சன்
ஆக 16, 2025 04:58

வழக்கம்போல dumb backdoor ஸ்ட்ராட்டஜிய அப்பளை பண்ணலியா ?


M Ramachandran
ஆக 16, 2025 02:01

ஆயுதவியாபாரியான அமெரிக்காவின் டொனால்டு த்ரும்பிற்கு அந்த நோக்கம் மில்லை. மேலும் ஆய்தங்களை உக்ரைன் தலையில் கட்டி அந்த நாட்டின் முடிந்த அளவு இயற்கைய்ய வழங்களை ஸ்வாதீன படுத்தி அழகு பார்ப்பது தான் முக்கிய நோக்கம். அது மட்டுமல்ல அங்கு உட்கார்ந்து கொண்டு ரசியாவை நோட்டம் யிடுவதற்கும் அது வசதியாக இருக்கும். அணுகுண்டுவைய்ய மூளையற்ற பாக்கிஸ்தான மாநில் புதைய்து வைத்து சீனா விற்கும் நமக்கும் பயம் உண்டாக்க நினைத்தான். அங்கு உலகறியா நாம் பங்கம் செய்து விட்டோம் . அதே வேலையை உக்கிரேனில் அங்கே செய்ய உத்தேசம் அடிவேலை செய்கிறார்.


சமீபத்திய செய்தி