உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோடி மீது அதிபர் டிரம்ப் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்; வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர்

மோடி மீது அதிபர் டிரம்ப் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்; வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர்

வாஷிங்டன்: அமெரிக்கா-இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தைகள் முன்னேறும்போது டிரம்ப், மோடி அடிக்கடி பேசுகிறார்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: பிரதமர் மோடி மீது அதிபர் டிரம்ப் மிகுந்த மரியாதை வைத்திருப்பதை நான் அறிவேன், அவர்கள் அடிக்கடி பேசுகிறார்கள். பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் நெருங்கிய உறவை கொண்டு உள்ளார். இரு நாடுகளின் வர்த்தகக் குழுக்களும் தொடர்ந்து தீவிரமான விவாதங்களை நடத்தி வருகிறது.ஓவல் அலுவலகத்தில் தீபாவளி கொண்டாட்டங்களின் போது டிரம்ப் மோடியுடன் பேசினார். அப்போது அங்கு அதிபர் டிரம்ப் உடன் மூத்த இந்திய-அமெரிக்க அதிகாரிகள் உடன் இருந்தனர். அதிபர் டிரம்ப் இந்தியா-அமெரிக்க உறவு குறித்து மிகவும் உறுதியாக உணர்கிறார். இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர் செர்ஜியோ சிறப்பாகச் செயல்படுகிறார். அவர் நமது நாட்டை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்துவார். இவ்வாறு அவர் கூறினார்.அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்காக இதுவரை ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன. தொடர்ந்து வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இந்த சூழலில் இருநாட்டு வர்த்தக குழுக்களும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டிரம்ப், மோடி அடிக்கடி பேசுவார்கள் என மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

MARUTHU PANDIAR
நவ 06, 2025 10:48

ஆமாம் இப்போ ஏன்னா அதுக்கு? உன் சி.ஐ.ஏ வை அடக்கி வை தன வினை தன்னை சுடும் என்பதை உணர்ந்து கொள் உன் சேட்டையை வட கொரியா, சீனா ,ரஷ்யா இங்க காட்டு பார்க்கலாம்.


A CLASS
நவ 05, 2025 10:50

மனதில் உள்ளதுதான் வெளியே வந்துள்ளது.


Ramesh Sargam
நவ 05, 2025 08:40

அதே சமயம் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களை மிகவும் தொந்தரவு செய்கிறார். புதியதாக அமெரிக்காவுக்கு பணியில் சேரவருபவர்களின் விசா கட்டணத்தை பலமடங்கு அவர்களின் வயிற்றெச்சலை கொட்டிக்கொள்கிறார். இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதித்து கஷ்டப்படுத்துகிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை