உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவுக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதித்தார் டிரம்ப்

சீனாவுக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதித்தார் டிரம்ப்

வாஷிங்டன் அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடி தந்த சீனா மீது, அதிபர் டிரம்ப் கூடுதலாக 50 சதவீத வரி விதிப்பை நேற்று அமல்படுத்தினார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பு முறையை கொண்டு வந்தார். இதன்படி சீனப் பொருட்களுக்கான வரி 54 சதவீதமாக உயர்ந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு சீனா 34 சதவீதம் வரி விதித்தது. இந்த வரி போர் காரணமாக உலகளவில் பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாக கடும் சரிவை சந்தித்து வருகின்றன.இந்நிலையில், சீனா விதித்துள்ள 34 சதவீத வரியை நீக்கவில்லை என்றால், சீன இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் எச்சரித்தார். ஆனால் சீனா, 'இந்த எதிர் நடவடிக்கை, சர்வதேச வர்த்தக ஒழுங்கைப் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டது. இது சட்டப்பூர்வமானது' எனக் கூறி மறுத்துவிட்டது.இதையடுத்து சீனப் பொருட்கள் அனைத்துக்கும் கூடுதல் 50 சதவீத வரி விதிக்கும் உத்தரவை டிரம்ப் பிறப்பித்தார். இது, நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால், சீனப் பொருட்கள் மீதான வரி அமெரிக்காவில் 104 சதவீதமாக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

GMM
ஏப் 09, 2025 07:22

சீனா பொருள் தரமற்றவை. டிரம்ப் வரிவிதிப்பு சரியே. சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தில் தரம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். சீனா பொருள்கள் ஒரு ஆண்டு கூட உழைப்பது இல்லை. பெரும் லாபம் ஈட்டி வந்த சீனாவிற்கு ஒரு பிரேக். அமெரிக்கா குடிமக்கள் தேவையில்லாத பொருள் வாங்கி குவிப்பது குறையும். அமெரிக்கா பொருளாதாரம் மீளும் .


Raj
ஏப் 09, 2025 06:15

டிரம்ப் சர்வாதிகாரனாக நடந்து கொள்கிறார், இதன் விளைவு பின்பு தான் தெரியும்.


Kasimani Baskaran
ஏப் 09, 2025 03:46

போட்டுத்தாக்குகிறார்... சிறப்பு. உலகப்பொருளாதாரம் மந்த நிலையை அடைய வாய்ப்பு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.. வேலையை தக்கவைத்துக்கொள்வது மிக முக்கியம்.


புதிய வீடியோ