உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீன அதிபரை சந்திக்கிறார் டிரம்ப்

சீன அதிபரை சந்திக்கிறார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சீனாவும், ரஷ்யாவும் இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருவதாக கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அடுத்த மாதம் தென்கொரிய பயணத்தின்போது, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்த நிலையில், சமீபத்தில், சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரை நம் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. 'இருண்ட சீனாவிடம், ரஷ்யாவையும், இந்தியாவையும் அமெரிக்கா இழந்து விட்டது' என, டிரம்ப் கூறினார். அதேசமயம், 'நண்பர் மோடி சிறந்த பிர தமர். இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்தவே விரும்புகிறேன்' எனவும் டிரம்ப் கூறினார். இந்த சூழலில், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்திக்க டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய நாடான தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில், ஏ.பி.இ.சி., எனப்படும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஓத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1ல் நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க அதிபர் டிரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இ தற்கு அவர் ஒப்புதல் தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் வருகிறார். அவரை சந்தித்து பேச அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங் கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், மாநாட்டின் போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து பேசவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, சீனா வருமாறு டிரம்ப் மற்றும் அவரின் மனைவிக்கு, சீன அதிபர் ஷீ ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அதற்கு டிரம்ப் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
செப் 08, 2025 03:56

ஜனநாயகத்தை பின்பற்றும் இந்தியா எங்கள் தோழமை நாடு - எங்களுடன் நட்பு வைத்திருக்கும் பொழுது நீங்கள் அவர்களுடன் தொடர்பில் இருக்கக்கூடாது என்று உருட்டுவாரோ... செய்தாலும் செய்வார்


தியாகு
செப் 08, 2025 03:03

ட்ரம்ப் விவரம் தெரியாதவரா இருக்காரு. இதுவே நம்ம கட்டுமரம் அமெரிக்காவின் அதிபராக இருந்தால் ஒரு ஆயிரம் கழக உடன்பிறப்புகளை சீனாவுக்கு அனுப்பி ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் சீனாவையே கத்தியின்றி ரத்தமின்றி ஆட்டையை போட்டு அமெரிக்காவின் வசம் ஆக்கியிருப்பாரு.


Ramesh Sargam
செப் 08, 2025 01:47

இந்திய பிரதமர் மோடிஜியை அழைத்தார். அவர் செல்லவில்லை. சீன அதிபரும் சந்திக்கக்கூடாது. அப்பொழுதுதான் ட்ரம்பின் கொட்டம் அடங்கும்.