| ADDED : அக் 01, 2025 10:09 PM
வாஷிங்டன்: கத்தாரை பிற நாடுகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் உத்தரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். இதன்படி, கத்தார் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தலைவர்களை குறிவைத்து கத்தாரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால், அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்ப்பை சந்தித்து பேசினார். அப்போது, காசாவில் பாதுகாப்பு ஏற்படுத்துவது குறித்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில், டிரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக் கொண்டனர். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள ஹமாஸ் அமைப்புக்கு 3 நாள் ஒப்பந்தம் டிரம்ப் கெடு விதித்து இருந்தார்.அப்போது, தொலைபேசி வாயிலாக பெஞ்சமின் நெதன்யாகுவை, தொலைபேசி மூலம் கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் பேச வைத்தார். அப்போது கத்தார் மீது நடந்த தாக்குதலுக்கு அவரிடம் இஸ்ரேல் பிரதமர் மன்னிப்பு கோரினார். இதனிடையே மற்ற நாடுகளின் தாக்குதலில் இருந்து கத்தாரை பாதுகாப்புது தொடர்பான உத்தரவில் டிரம்ப் கையெழுத்து போட்டு உள்ளார்.இதன்படி, கத்தாரின் உள்கட்டமைப்பு, இறையாண்மை, பிராந்தியம் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் அமெரிக்காவின் பாதுகாப்பு அல்லது அமைதி மீதான தாக்குதலாகவே அமெரிக்கா கருதும். அத்தகைய தாக்குதல் நடந்தால், கத்தாரில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கு தூதரக ரீதியில், பொருளாதார ரீதியிலும், தேவைப்பட்டால், ராணுவ ரீதியிலும் அமெரிக்கா பதிலடி கொடுக்கும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.