உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எச்1பி விசாவில் ஊழியர்களை நியமித்தோருக்கு அவசரநிலை; தலா ரூ.88 லட்சம் கட்டணம் விதித்து டிரம்ப் உத்தரவு

எச்1பி விசாவில் ஊழியர்களை நியமித்தோருக்கு அவசரநிலை; தலா ரூ.88 லட்சம் கட்டணம் விதித்து டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கான 'எச்1பி' விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலராக, அதாவது இந்திய மதிப்பில் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவில் இருந்து ஏற்கனவே விசா வைத்திருப்போருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள இந்தியர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் மென்பொருள் உள்ளிட்ட திறன் வாய்ந்த துறைகளுக்கு தேவையானவர்கள் கிடைக்காத நிலையில், 1990களில் அறிமுகம் செய்யப்பட்டது தான், எச்1பி விசா முறை. இதன்படி, இந்தியா, சீனா உட்பட வெளிநாடுகளில் இருந்து திறன் வாய்ந்தவர்கள் வேலைக்கு கிடைத்தனர். இவ்வாறு குறிப்பிட்ட காலம் தங்கியிருந்து வேலை பார்த்த வெளிநாட்டவருக்கு, 'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தர குடியிருக்கும் உரிமை கிடைக்கும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=baqv2xc8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

6 ஆண்டுகள்

சாதாரணமாக எச்1பி விசா என்பது முதலில் மூன்று ஆண்டுக்கு வழங்கப்படும்; அதன்பின், ஆறு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும். ஜனவரியில் அதிபராக பதவியேற்ற டிரம்ப், சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவரை திருப்பி அனுப்ப முடிவு செய்தார்.

4 லட்சம் ரூபாய்

புதிதாக வருபவர்களையும் குறைக்க விசா நடைமுறைகளை கடுமையாக்கினார். குறைந்த ஊதியம், குறைந்த திறன் கொண்ட பணியாளர்களை நிரப்புவதற்காக எச்1பி விசாவை தவறாக பயன்படுத்தி, அமெரிக்கர்களின் பணி வாய்ப்புகள் சுரண்டப்பட்டு வருவதாக டிரம்ப் அரசு தொடர்ந்து கூறி வருகிறது.இந்நிலையில், புதிய உத்தரவு மூலமாக எச்1பி விசாவுக்கான கட்டணத்தை, 1 லட்சம் டாலராக (ரூ. 88 லட்சம்) உயர்த்தியுள்ளார். தற்போது இந்த கட்டணம் 4 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளது.

அமெரிக்கா விளக்கம்

இந்த முடிவு, இந்தியர்களை பணிக்கு அமர்த்தி இருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை குறி வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில், எச்1பி அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது. புதிய உத்தரவின் மூலம் தற்போது H1B விசா வைத்திருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஒரு லட்சம் டாலர் கட்டணம் என்பது புதிய விசா கோரும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அமெரிக்கா தெளிவுபடுத்தி உள்ளது.

டிரம்ப் உத்தரவு

கடந்தாண்டு வழங்கிய எச்1பி விசாக்களில், 71 சதவீதம் இந்தியர்களே பெற்றனர். அடுத்து, சீனர்கள் 11.7 சதவீதம் பெற்றனர். இப்படி அங்கு வந்தோருக்கு, அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் அதே அளவு சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இன்று (21ம் தேதி) அமலுக்கு வரும் என்பதால், மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற பெரும் நிறுவனங்கள், எச்1பி விசா வைத்துள்ள பணியாளர்கள் 14 நாட்களுக்கு அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்; சொந்த நாடு சென்றுள்ள பணியாளர்கள் 24 மணி நேரத்திற்குள் அமெரிக்கா திரும்ப வேண்டும் என அறிவித்துள்ளன.இதற்கும் வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. H1B விசா வைத்திருப்பவர்கள், வெளிநாடு சுற்றுலா சென்றவர்கள், எப்போதும் போல் அமெரிக்காவுக்கு மீண்டும் திரும்பி வரலாம். அவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அள்ளிய நிறுவனங்கள்

ஜூன் 30ம் தேதி வழங்கப்பட்ட விசாக்களில் 13 சதவீதத்தை, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெற்றுள்ளன. * டி.சி.எஸ். 5,505; * இன்போசிஸ் 2,004; * எல்.டி.ஐ. மைண்டுட்ரீ 1,807; * எச்.சி.எல். 1,728; * விப்ரோ 1,523; * டெக் மஹிந்திரா 951; * எல் அண்ட் டி 352 பெற்றுள்ளன. எனினும், முந்தைய ஆண்டை விட இது குறைவு.

அமெரிக்காவுக்கே பாதிப்பு

நிடி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாகி அமிதாப் காந்த் கூறியதாவது: எச்1பி விசா கட்டண உயர்வால், இந்தியாவுக்கு பாதிப்பு வராது. அங்கு செல்லும் இந்தியாவின் சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் இனி நம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வாய்ப்புள்ளது. அமெரிக்காவுக்கு தான் இழப்பு.

காங்கிரஸ் கிண்டல்

இந்த விவகாரம் தொடர்பான பதிவில், 'நான் மீண்டும் சொல்கிறேன்; இந்தியா ஒரு பலவீனமான பிரதமரை கொண்டுள்ளது' என ராகுல் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கே, 'வெற்று கோஷங்கள், இசை நிகழ்ச்சிகள், மோடி மோடி என்று கோஷமிட வைப்பது... இதெல்லாம் வெளியுறவு கொள்கை அல்ல. தேசிய நலன்களை பாதுகாப்பதுதான் உண் மையான கொள்கையாக இருக்கும்' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Vasan
செப் 21, 2025 10:19

2005 ஆம் வருடத்தில் அமெரிக்க அரசாங்கமானது நம் பாரத பிரதமர் திரு மோடி ஜி அவர்களுக்கே விசா வழங்க மறுத்தது. திரு மோடி ஜி அவர்கள் அப்பொழுது குஜராத்தின் முதலமைச்சராக இருந்தார். அப்பொழுது குஜராத்தில் நடந்த இனக்கலவரங்களுக்கு அவரே காரணம் என்று இந்திய தேசிய மனித உரிமை ஆணையத்தின் குற்றச்சாட்டின் அடிப்படையில் அமெரிக்கா அரசாங்கம் அவருக்கு விசா வழங்க மறுத்தது. பின்னர் நடந்தது சரித்திரம். திரு மோடி ஜி அவர்கள் உலகளாவிய தலைவராக போற்றப்படுகிறார். இருபது வருடங்களுக்கு பின் மீண்டும் அமெரிக்கா இந்தியர்களை சீண்டி பார்க்கிறது. இது வெகு விரைவில் முறியடிக்கப்படும். அமெரிக்கா தன் தவறை உணர்ந்து கொள்ளும்


Kalyanaraman
செப் 21, 2025 08:16

நமது நாட்டையும் ராணுவத்தையும் அவமானப்படுத்தும் விதமாக அடிக்கடி பேசும் இந்த தேச துரோகியை, இங்கிலாந்து குடிமகனான ராகுல் காந்திவின்சி யின் இந்திய குடியுரிமையை ரத்து செய்து அவரை இங்கிலாந்துக்கு அனுப்ப வேண்டும். கடந்த காலத்தில் சீனாவுக்கு கைக்கூலியாக இருந்தவர், இன்னைக்கு அமெரிக்காவுக்கு கைக்கூலியாக இருக்கிறார்.


Thravisham
செப் 21, 2025 07:48

இந்திய மென் பொருள் கம்பெனி


Appan
செப் 21, 2025 07:06

காங்கிரஸ் ராகுல் ஒரு இந்தியரா? நாட்டு பெருமை இருந்தார் இவர் இப்படி பேசுவாரா? உடம்பு இந்தியாவில் உள்ளம் ரோமில் இருந்தால் இப்படித்தான் பேசுவார்.. காங்கிரஸ் இந்தியாவில் இருக்க, இந்த சோனியா காந்தி பிடியில் இருந்து காங்கிரஸ் வெளிவரனும். காங்கிரசின் அடிமை தனத்தை பாருங்கள். சுதந்திரம் வாங்கியும் 77 வருடங்கள் ஆகியும் இன்னும் வெளிநாட்டு அடிமை மோகம் போகவில்லை.


Ranganaayagi Subbiah
செப் 21, 2025 06:46

MR.HOWARD LUTNIK, US COMMERCE SECRETARY EXPLICITLY STATED DURING SIGNING OF THE BILL BY TRUMP THAT THE CHARGES WILL BE APPLICABLE EVERY YEAR BOTH FOR RENEWALS AS WELL AS FOR NEW APPLICATIONS. HOWEVER THE SIGNED COPY OF THE BILL UNDER SECTION 122 SAYS ALIENS ENTERING ONLY WILL HAVE TO PAY


Subramanian
செப் 21, 2025 06:04

Please read the circular and write articles. Don’t go by media reports and confuse readers. This rule is applicable only for new applications for H1B and not for existing and renewals. We expect Dinamalar to authenticate its news and not spread rumours


Anantharaman
செப் 21, 2025 06:02

பழம் நழுவிப் பாலில். இதுதான் நல்ல சந்தர்ப்பம். இனி ஒரு நிறுவனமும் தனி மனித. ரும் நம் நாட்டைத் துறந்து அமெரிக்காவை வளமாக்க முயல்வதை நிறுத்த வேண்டும். .


SK
செப் 21, 2025 05:47

காங்கிரஸ் கட்சியின் சிரிக்கவைக்கும் அறிக்கை. தேசிய பாதுகாப்பு பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை.அவர்கள் முன்பு எப்படி ஆட்சி செய்தார்கள் என்பது நமக்கு நன்றாகத் தெரியும்.காங்கிரஸ் கட்சியின் உயர் பதவியில் உள்ள தலைவர்கள் உண்மையில் ஜோக்கர்களே


சிட்டுக்குருவி
செப் 21, 2025 05:46

இந்த உத்தரவு இனி மேல் வழங்கப்படும் புதிய விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும் பழைய விசா உள்ளவர்கள் பழையபடியே உள்ள எல்லா விதமான பலன்களையும்,வெளிநாட்டு பயணம் உள்பட பெறலாம் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது .ஏற்கனவே விசா வைத்திருக்கும் மக்கள் பீதியடையவேண்டாம் .


லிங்கம், கோவை
செப் 21, 2025 05:27

காங்கிரஸ்காரர்கள் உடம்பில் இந்திய ரத்தம் ஓடுகிறது என்றால் அவர்கள் இந்த நிகழ்வுக்காக ட்ரம்பை தானே கடித்து இருக்க வேண்டும்... தேச நலன்களுக்காக பாடுபடும் மோடியை கிண்டல் பண்ணும் இவர்கள் எந்த நாட்டுக்காரர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை