உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் நிறுத்த திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்; காசாவில் தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவு

போர் நிறுத்த திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்; காசாவில் தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமைதி போர் நிறுத்த திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளவதாக அறிவித்த உடன், ''காசாவில் குண்டுவீசி தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்'' என இஸ்ரேலுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடுமையாக தாக்கி வருகிறது. இந்த போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசியிருந்தார். அப்போது காசாவில் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஏற்க அவர் சம்மதம் தெரிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ofcbiiyt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தம் ஹமாஸ் அமைப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, ஹமாஸ் அமைப்பு டிரம்ப் திட்டத்தினை ஏற்று, இஸ்ரேல் பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க சம்மதித்துள்ளன. தற்போது இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்த முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில் காசாவில் குண்டுவீசி தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவிட்டார்.இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் அமைதிக்கு தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன். காசா மீதான குண்டுவீச்சை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும். அப்போது தான் பிணைக் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாகவும், விரைவாக மீட்க முடியும். தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்து நாங்கள் ஏற்கனவே விவாதித்து வருகிறோம். இது காசா பிரச்னை மட்டும் கிடையாது. மத்திய கிழக்கில் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டியது. இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Baskaran Ramasamy
அக் 04, 2025 14:01

பொதுவாக ஒரு மனிதன் ஆண்மீக ஞானம் மற்றும் ஆண்மீக பயிற்சி இல்லாமல் இருந்தால் அவர்களுடைய முதுமை மனநலம் பாதிக்கபட்ட தன்மைக்கு வந்து விடும், அவர்களுடைய செயலில் பொதுநலம் இருக்காது, சுயநலம் வேரூண்றிவிடும், பணமும் பதவியும் இருந்தால், தான் என்ற ஆணவம் மேலோங்கி விடும்,ஆசை குறையாது,விட்டுகொடுக்கும் தன்மை போய்விடும். அவர்கள் வாழந்த வாழக்கைக்கு அர்தம் இல்லாமல் போய்விடும், பிரதமர் மோடி அவர்களுக்கு ஆண்மீகம் ஞானம் மற்றும் ஆண்மீக பயிற்சி ஒரு மிகசிறந்த தலைவராக வழிநடத்துகிறது. ஆனால் அதிபர் டிரம்ப் அவர்கள் தன்மையை உணர்ந்து பாருங்கள்


அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
அக் 04, 2025 11:55

இஸ்ரேல் Vs Palestine war, Ukraine Vs Russia war முழுமையாக போர் நிறுத்தம் நடந்தால் டிரம்ப் ஜீ விற்கு நோபெல் பரிசு கொடுக்கலாம். இல்லையேல் ஒரு குண்டூசி கூட கிடையாது


Rathna
அக் 04, 2025 11:08

இது ஆப்கானிஸ்தான் போலவே நடக்கும். மக்களில் 40% மேல் தீவிரவாதத்தை பின்பற்றினால் இது தான் நடக்கும். இன மற்றும் மத வெறுப்பு வழிபாட்டு தலங்களில் போதிக்கபடும்போது கரையான் போல தீவிரவாதம் சமூகத்தை அரிக்கும். பாகிஸ்தானிலும் இது தான் நடக்கிறது. சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் அடைந்தாலும் பள்ளி மாணவர்களுக்கு இந்தியர்களை வெறுக்க பாடம் நடத்தப்படுகிறது. இந்திய கலாச்சாரத்தை பற்றி தவறான கண்ணோட்டம் போதிக்கப்படுகிறது. தீவிரவாதத்தை ஆதரிக்க ஈரான், கத்தார், போன்ற நாடுகள் உள்ளது. ட்ரம்பின் கம்பனி காசாவை புனரமைப்பு செய்தாலும், அதை தீவிரவாதிகள் இன்னும் 5-10 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானை போலவே மீண்டும் பிடித்து கொள்வார்கள். இஸ்ரேல் மீண்டும் படையெடுத்து காசாவை, தீவிரவாதிகளை அடக்கும்.


Murthy
அக் 04, 2025 10:02

இசுரேலுக்கு ஆயுதம் தருவதை அமேரிக்கா நிறுத்தினால் போர் தானாக முடிவுக்கு வந்துவிடும் . ...


M S RAGHUNATHAN
அக் 04, 2025 09:53

டிரம்புக்கு ஒரு நோபல் பரிசு பார்சல்.


Haja Kuthubdeen
அக் 04, 2025 09:03

வாழ்த்துக்கள்...அமைதியே முக்கியம்.


M A Dass Dass
அக் 04, 2025 08:28

இது நாடகம் ஆடட்டும் பார்க்கலாம்


சசிக்குமார் திருப்பூர்
அக் 04, 2025 08:19

இவனுக்கு ஒரு சமாதான பரிசு தந்து விடுங்கள் கொசு தொல்லை தாங்க முடியல


Ramesh Sargam
அக் 04, 2025 08:11

டிரம்ப் almost அந்த நோபல் பரிசை நெருங்கிவிட்டார். ஒருவேளை போர் நின்றுவிட்டால், நோபல் அமைப்பினர் கொடுக்காவிட்டாலும், அவரே அதை எடுத்துக்கொண்டுவிடுவார்.


Mecca Shivan
அக் 04, 2025 08:11

டோனல் உத்தரவு செல்லாது என்று இஸ்ரேல் கூறினால்


Haja Kuthubdeen
அக் 04, 2025 09:06

செல்லாது என்று அமெரிக்காவை எதிர்த்து இஸ்ரேல் வாலாட்ட முடியாது..உண்மையாக அமெரிக்காவின் ஒரு மாகாணம் அது...


SANKAR
அக் 04, 2025 10:32

Please read media before commenting.Israel already FULLY agreed with Trumps plan


Anand
அக் 04, 2025 10:47

ஹமாஸ் சமாதானம் ஆனால் ஒரு கண்டிஷன், அதாவது இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தி காசாவை விட்டு வெளியேறும் வரை ஆயுதங்களை கீழே போடமாட்டோம் என தெரிவித்துள்ளது. இது நடப்பது அவ்வளவு சுலபமில்லை, எனவே அமெரிக்கா சொன்னாலும் இஸ்ரேல் தற்சமயம் கேட்காது என்றே தோன்றுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை