உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கான புதிய தூதர் செர்ஜியோ கோர்: அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியாவுக்கான புதிய தூதர் செர்ஜியோ கோர்: அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். டிரம்பின் புதிய வரி விதிப்பு காரணமாக, இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் எழுந்துள்ளது. இந் நிலையில், இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமிக்கப்பட்டு உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி உள்ளதாவது; செர்ஜியோ கோரை இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்பு தூதராகவும் பதவி உயர்வு அளிக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். செர்ஜியோ பதவியேற்கும் வரை அவர் வெள்ளை மாளிகையில் தனது தற்போதைய பணியில் நீடிப்பார்.அவர் எனது சிறந்த நண்பர். பல ஆண்டுகளாக என்னுடன் இருக்கிறார். எனது தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் பணியாற்றியவர். அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க எங்களுக்கு உதவ முழுமையாக நம்பும் ஒருவர் இருப்பது முக்கியம். செர்ஜியோ அப்படி ஒரு தூதராக மாறுவார். வாழ்த்துகள்.இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார். 58 வயது நிரம்பிய செர்ஜியோ கோர், தற்போது ஜனாதிபதி மாளிகையில் பணியாளர் அலுவலக இயக்குநராக இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ravichandran M
ஆக 23, 2025 20:38

இந்தியா விளக்கமான தூதர் இதுவரை நியமனம் செய்யாமல் இருந்தது, இன் நிலையே பெயர்ந்து இருக்கலாம். தற்போது உள்ள நிலையில் இது மேலும் குழப்பத்தை உண்டாக்கும் ட்ரம்ப் அவசரநிலை புரிகிறது ஆனால் நமது பிரதமரும் வெளி உறவு துறை அமைச்சர் டர்.ஜெயசங்கர் வேகமாக செயல் படுகிறார்கள் ட்ரம்ப் வேண்டுமானல் அமைதிக்கான நோபல் பரிசுக்கு முயற்சிக்கலாம் குட்பை டு அமெரிக்கா


Nathan
ஆக 23, 2025 10:35

உங்கள் உறவே இல்லாமல் இருந்தால் நிச்சயம் இந்தியா நிம்மதியாக இருக்கும்


Sun
ஆக 23, 2025 08:20

நீ ஏன் புது தூதரை இப்போதுகொண்டு வருகிறாய் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். மத்திய அரசை கவிழ்க்கும் உன்னுடைய சதி எடுபடவில்லை.இந்தியாவிற்குள் எதிர்கட்சிகளின் பப்பு வேகவில்லை. அதனால் உள்ளூர் தேச துரோக புல்லுருவிகளுக்கு வேறு மாதிரியான ஐடியா கொடுக்க நீ வருகிறாய். இப்போது இந்தியா, சீனா, ரஷ்யா ஒரே நேர் கோட்டில். இனி உன்னுடைய பாச்சா பலிக்காது டிரம்பரே.


சமீபத்திய செய்தி