உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவிற்குள் நுழைய போகிறோம்; வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் சஸ்பென்ஸ்!

இந்தியாவிற்குள் நுழைய போகிறோம்; வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் சஸ்பென்ஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், ''இந்தியாவிற்குள் நுழைய போகிறோம்'' என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது: நாங்கள் இந்தோனேசியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தோம். நான் அவர்களின் மிகச்சிறந்த ஜனாதிபதியுடன் பேசினேன். இந்தோனேசியாவில், எல்லாவற்றையும் நாங்கள் முழுமையாக அணுக முடியும். உங்களுக்குத் தெரியும்.நாங்கள் எந்த வரிகளையும் செலுத்த மாட்டோம். அதுதான் ஒப்பந்தத்தின் மிகப்பெரிய பகுதியாக இருக்கலாம். நாங்கள் இந்தியாவிற்குள் நுழையப் போகிறோம். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் மக்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை முடிவு செய்ய வேண்டும் என்ற அவசரத்தில் இந்தியா செயல்படவில்லை. இரு நாடுகளும் பலன்பெறும் வகையில் முடிவுகள் இருந்தால் மட்டுமே ஏற்று கொள்வோம் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

10 சதவீத வரி

இது குறித்து டிரம்ப் கூறியதாவது: கரீபியன், ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அனைத்திற்கும் ஒரு வரியை நாங்கள் நிர்ணயிப்போம். குறைந்தது 100 நாடுகளுக்கு 10% க்கும் அதிகமான வரி விதிக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

என்றும் இந்தியன்
ஜூலை 16, 2025 16:47

தயவு செய்து இந்த மோசமான மனநோயாளியை உள்ளே விடவேண்டாம்


rajasekar
ஜூலை 16, 2025 12:38

கனவு காண எல்லோருக்கும் உரிமை உள்ளது டிரம்ப்பும் விதிவிலக்கல்ல.


Ramesh Sargam
ஜூலை 16, 2025 12:22

இரு நாடுகளும் பலன்பெறும் வகையில் முடிவுகள் இருந்தால் மட்டுமே ஏற்று கொள்வோம் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது டிரம்புக்கு புரிந்தால் சரி. புரியாவிட்டால் சாரி.


m.arunachalam
ஜூலை 16, 2025 11:44

இவ்வாறான வர்த்தகம் என்ற நுழைவுகள் நம்மை பலவீனமாக்கும் . அதை உணர்ந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் . தேர்ந்து தெளிதல் நலம் . பொருள் தேவைகளை முன்னிறுத்தி மக்களை பலவீனமாகியுள்ளோம் .


ஆரூர் ரங்
ஜூலை 16, 2025 11:39

உள்ளூர் அரசியல் லாபத்திற்காக பல அன்னிய நட்பு நாடுகளை எதிர்த்துக் கொள்கிறார். சேவைத்துறையில் பெருமளவு பாரதத்தை நம்பியிருக்கும்( நிரந்தர?,)நிலையை மறந்துபேசுகிறார். இனிமே யு எஸ் பெருங்காயம் வைத்திருந்த பழைய பாண்டம் . வாசனைதான் மிச்சம்.


பெரிய குத்தூசி
ஜூலை 16, 2025 11:19

போறபோக்குல எதையாவது உளறிக்கிட்டே போறார்.


saravan
ஜூலை 16, 2025 11:10

அமேரிக்கா யாருடன் இருக்கிறது என்பது வேறு விஷயம் டிரம்ப் முதலில் அவருடைய கட்சி கொள்கையை பின்பற்றுகிறாரா என்றால் இல்லை இவர் காலம் முடியும் ராய் அணைத்து நாட்டு தலைவர்களும் கொஞ்சம் உசாராக இருக்க வேண்டும் நாடகத்தில் வரும் கோமாளி கதையே சொல்லாமல் கைதட்டல் வாங்கிவிடுகிறான் அது முக்கியம் இல்லை தான் என்கிற மனோபாவம் அதிகம் உள்ள மனிதன் வீழ்வான்


saravan
ஜூலை 16, 2025 11:04

வரிப் பபூன்


தஞ்சை மன்னர்
ஜூலை 16, 2025 10:44

நாங்கள் சப்பை மூக்குக்காரனுக்கு எதிரானவர்கள் இப்படிக்கு ஜெய் சங்கர் நாங்கள் அகண்ட பாரதத்திற்கு ஆசைப்பட்டொம் அதனால் அமெரிக்கா காரனை உள்ளே விட்டு அமெரிக் க கண்டதையும் அகண்ட பாரதத்திற்கு வழி வகுத்து இருக்கோம் இப்படிக்கு தற்குறிகள்


SUBBU,MADURAI
ஜூலை 16, 2025 10:35

இந்தியாவிற்குள் நுழையப் போகிறோம் ஆனாலும் பாகிஸ்தானை இந்தியாவிற்கு எதிராக கொம்பு சீவி வளர்த்து விடுவோம் என்றுதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்வதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இந்தியாவை தவிர்த்து உலகில் வேறு எந்த நாடும் வர்த்தகம் பண்ண முடியாது என்பதுதான் நிதர்சனம். அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் war on terror என்ற பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று நேட்டோ மற்றும் நேட்டோ அல்லாத நாடுகளை ஒன்று சேர்த்து ஒரு படையை அமைத்தது. பொதுவாக அமெரிக்க அதிபர்களுக்கு தங்கள் நாட்டில் மவுசு குறையும் போதும் சரி மேற்குலக நாடுகளில் ஏதாவது பிரச்சனை என்றாலும் வெளிநாடுகளில் குறிப்பாக ஆசியா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏதாவது கலகத்தை உண்டாக்கி போரை நடத்துவார்கள் அதன் மூலம் அவர்கள் உள்நாட்டு மக்களை திசை திருப்பி தங்களுக்கு ஆதரவாக மாற்றி விடுவார்கள் இதுதான் அவர்களின் தந்திரம். அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தாக்கிய ஒசமா பின்லேடனுக்கு பாகிஸ்தான்தான் அடைக்கலம் கொடுத்து அவனை மறைத்து வைத்திருந்தது.ஈரான், வடகொரியா,ஏமன் போன்ற நாடுகளை பயங்கரவாத நாடுகள் என்று கூறும் அமெரிக்கா பின்லேடனை ஒளித்து வைத்துள்ள பாகிஸ்தானை கண்டு கொள்ளவே இல்லை. ஆப்கானிஸ்தான் மீது போரை நடத்தி அந்த நாட்டை நாசப் படுத்தியது மேலும் ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் இருக்கிறது என்று கூறி அந்த நாட்டை நாசப்படுத்தி சதாமை தூக்கில் போட்டது அதே போல் சிரியா, லிபியா நாடுகளை துவம்சம் செய்து அந்நாட்டு மக்களை நடுத் தெருவில் அலைய விட்டது, நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிரான நாடு உலகில் எங்கு தீவிரவாதம் நடந்தாலும் அதை ஒழிப்போம் என்று கிளம்பியவர்கள் தீவிரவாதிகளை உருவாக்கும் பாகிஸ்தானை மட்டும் ஏன் கண்டு கொள்ளவில்லை? ஏனென்றால் இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை தடுக்க பாகிஸ்தான் போன்ற ரௌடி நாடுகள் தேவை. அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து இந்தியாவை சீண்டிக் கொண்டே இருந்தால்தான் நம் வளர்ச்சி தடைபடும் என்பதுதான் அவர்களின் குறிக்கோள். நேட்டோவில் இல்லாத பாகிஸ்தானை 1947 ஆகஸ்ட் 14 ம் தேதி முதல் இன்றுவரை அமெரிக்காவும், பிரிட்டனும் ஆதரித்து வந்துள்ளனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை