எதிர்க்கட்சிக்கு நிதி கொடுத்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் எலானுக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் நிதி வழங்கினால், கடும் விளைவுகளை சந்திப்பார் என்று அதிபர் டிரம்ப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.குடியரசு கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பராக போன மாதம் வரை இருந்த எலான் மஸ்க், தற்போது அவரின் எதிரியாக மாறிவிட்டார். கடும் எதிர்ப்பு
இருவரின் சமீபத்திய மோதல்களை உலகமே ஆர்வத்துடன் கவனித்து வருகிறது.டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய செலவு மசோதாவுக்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மசோதாவால் நாட்டின் கடன், 200 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என எலான் மஸ்க் கூறினார்.மேலும், மின்சார வாகனங்களுக்கான வரிச்சலுகையை நிறுத்தும் திட்டம் மசோதாவில் இடம் பெற்றுள்ளது. இதனால் எலான் மஸ்க்கின், 'டெஸ்லா' நிறுவனத்தின் லாபம் நடப்பாண்டில் 20 சதவீதம் குறையும் என, கணிக்கப்பட்டுள்ளது.இதனால், எலான் மஸ்க் இந்த மசோதாவை எதிர்ப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில், எலான் மஸ்க் குறித்து அதிபர் டிரம்ப் அமெரிக்க செய்தி சேனலுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: எலான் மஸ்க்குடனான உறவு முடிந்துவிட்டது. அவர் அதிபர் பதவியின் மாண்புக்கு அவமரியாதை செய்துவிட்டார். விமர்சனம்
ஆனால், அவருடைய விமர்சனங்கள், என் மசோதாவின் பலங்களை மக்களுக்கு உணர்த்த உதவின. ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு எலான் மஸ்க் நிதி வழங்கினால், மிக கடுமையான விளைவுகளை எதிர்கொள்வார்.இவ்வாறு அவர் கூறினார்.