உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அடுத்த 24 மணி நேரத்தில் பாருங்க... உருட்டிப் பார்க்கிறார் டிரம்ப்

அடுத்த 24 மணி நேரத்தில் பாருங்க... உருட்டிப் பார்க்கிறார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: 'இந்தியா மீதான வரி விதிப்பை, அடுத்த 24 மணி நேரத்தில் கணிசமாக அதிகரிப்பேன்' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப், தான்தோன்றித்தனமாக பேசக்கூடியவர்; அவரது கிறுக்குத்தனமான செயல்பாடுகளால், நட்பு நாடுகள் அனைத்தும் பகை நாடுகளாக மாறி விட்டன. நேட்டோ கூட்டமைப்பு நாடுகள், 'அமெரிக்காவை ஏன் தான் கூட்டணியில் வைத்திருக்கிறோமோ' என்று சலித்துக் கொள்ளும் அளவுக்கு டிரம்ப் வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=02zg75xh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இத்தகைய சூழ்நிலையில், ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் முயற்சித்தார். இதற்கு ரஷ்ய அதிபர் புடின் சம்மதிக்கவில்லை. அவருடன் நேருக்கு நேர் மோத முடியாத டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது பாயத் தொடங்கியிருக்கிறார்.இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக 2 நாட்களுக்கு முன் கூறியிருந்தார். அதற்கு மத்திய அரசு பதிலடி கொடுத்திருந்தது. அமெரிக்க அரசின் நிலைப்பாடு நியாயமற்றது என்று வெளியுறவுத்துறை தெரிவித்திருந்தது.இந்நிலையில், இன்று டிரம்ப் கூறியதாவது:இந்தியா பற்றி மற்ற அனைவரும் சொல்ல விரும்பாத விஷயம் இதுதான். அந்த நாடு அதிகமாக வரி விதிக்கிறது. அமெரிக்கா அவர்களுடன் மிகக் குறைவான வர்த்தகமே செய்கிறது. இந்தியா ஒரு சிறந்த வர்த்தக கூட்டாளி கிடையாது. அவர்கள் நம்முடன் நிறைய வர்த்தகம் செய்கிறார்கள். நாம் அவர்களுடன் வர்த்தகம் செய்வதில்லை. எனவே நாம் அவர்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தோம். அடுத்த 24 மணி நேரத்தில் அவர்கள் மீதான வரி விதிப்பை கணிசமாக அதிகரிக்கப்போகிறேன். ஏனெனில், அவர்கள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறார்கள்.இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அதிபர் டிரம்பின் உருட்டல் மிரட்டல்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை தகுந்த பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Bhakt
ஆக 05, 2025 23:54

இப்படியே கத்திக்கிட்டு திரிஞ்சால் இவர் இதயம் தான் வெடிக்கும்.


SUBBU,MADURAI
ஆக 05, 2025 21:59

Are you watching how Modi govt is getting unfairly accused of supporting Russias war machine in Ukraine? Everyone is trading with Russia right now: Europe, China, USA... but somehow blame went to Indian govt This is exactly how RSS was unfairly accused of Nazi connections Everyone had deals with the Nazis: Communists, Church, Big US corporations ... but somehow blame went to RSS


KR india
ஆக 05, 2025 21:55

இந்தியா மீதான அணுகுமுறையில், அமெரிக்கா மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்பதும் நமது வேண்டுகோள் ஏனெனில், லட்சக் கணக்கான "நம்மவர்கள்" அமெரிக்காவில் கல்வி-வேலை வாய்ப்பில் இருக்கிறார்கள். அமெரிக்கா பொருளாதார உயர்வுக்கு, இந்திய இளைஞர்களின் பங்கு மகத்தானது. அமெரிக்கா வெளியுறவு துறை அதிகாரிகளும், இந்திய வெளியுறவு துறை அதிகாரிகளும் சுமுகமான தீர்வை எட்டுவதே இரு நாடுகளுக்கும் நல்லது.


SUBBU,MADURAI
ஆக 05, 2025 22:21

Following India, China also dismisses U.S. warnings regarding the purchase of Russian oil.


SP
ஆக 05, 2025 21:54

இவர் இப்படியே செய்து கொண்டு இருந்தால் அமெரிக்கா இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் அந்தந்த நாடுகள் வரியை உயர்த்தி அமெரிக்க மக்களை பிச்சை எடுக்க விட போகிறார். அதன்பின் அமெரிக்க மக்களே இவரை ஓட ஓட விரட்ட போகிறார்கள் இறுதியில் அதுதான் நடக்கும்.


உண்மை கசக்கும்
ஆக 05, 2025 21:24

மிக பெரிய சம்பவம் நடைபெற போகிறது. டிரம்ப் கோமாளித்தனத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதுவரை அமெரிக்க வரலாற்றில் நடை பெறாத சம்பவம் நடைபெற போகிறது. வெள்ளை மாளிகை...சிறை...முடிவுறை.


Easwar Kamal
ஆக 05, 2025 21:22

இந்த trumpanuku எதனை பேர் குழல் ஓதினானுவ. இப்போ எப்படி ஆப்பு வருது பாருங்க மக்களே. இது எல்லாம் வெறும் ட்ரைலர் தன மெயின் படம் இனிமேதான் இருக்கு. விசா இல்லாத மக்களை தான் இந்தியாவுக்கு நாடு கடத்தினார் இப்போ வரைக்கும். கூடிய விரைவில் விசா உள்ளவனுங்களும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 05, 2025 20:47

இந்திய வெளியுறவுத்துறை தகுந்த பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - தடால்ன்னு விழுவார்களா? ஏனெனில் ரஷிய எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் இவரது பணக்கார நண்பர்கள் அதிரடிக்கு எல்லாம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.


SUBBU,MADURAI
ஆக 05, 2025 21:27

அதெப்படி இந்த தேசத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் இந்துக்களாகிய நாங்கள் எங்களுக்கு வந்த துயரம் போல வருந்திக் கொண்டிருக்கிறோம் ஆனால் உம்மைப் போன்ற மதம்மாறியவர்கள்ள் எல்லாம் எப்படி கொண்டாட்டத்துடன் குதூகலமா இருக்கீங்க ஆனால் ஒன்று மட்டும் உறுதி நீங்கள் உங்களை திருத்திக் கொள்ளாவிட்டால் நாங்கள் தயவு தாட்சண்யம் பார்க்காமல் துரோகிகளை சுளுக்கெடுத்து திருத்துவோம் ...


google
ஆக 05, 2025 20:44

viswaguru enna panraru


சேகர்
ஆக 05, 2025 20:39

இவர் இப்படித்தான் உளறுவார்... மோடி ஐ பார்த்ததும் பம்முவார்....இன்று உலகமே உச்சரிக்கும் ஒரே சொல் மோடி மோடி மோடி ... இந்தியாவில் இப்போது சமூக கட்டமைப்பு , சுத்தம் அனைத்தும் அமெரிக்கா வை விஞ்சும் வகையில் உள்ளது... அனைத்து அமெரிக்கா மக்கள் இந்தியாவில் குடியேற வரிசையில் நிற்கிறார்கள் ....


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 05, 2025 20:36

அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீதான வரி விதிப்பை கணிசமாக அதிகரிக்கப்போகிறேன். ஏனெனில், அவர்கள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறார்கள். - கொள்ளை லாபம் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் நயாரா நிறுவனத்திற்கு வரிச்சுமை மக்களுக்கு.


Suppan
ஆக 05, 2025 21:53

ஐரோப்பிய நாடுகள் ரஷியன் எண்ணெயை வாங்கக்கூடாது என்று அமெரிக்கா தடை செய்தது. ஆனால் ரிலையன்ஸ் ருஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி சுத்திகரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு விற்கிறது. இதனால் நம் நாட்டுக்கு அந்நிய செலாவணி கிட்டுகிறது. இது வேண்டாம் என்கிறீர்களா? உங்களின் மோதி வெறுப்பு நமது நாட்டின் மீதான வெறுப்பாக மாறி உள்ளது. ராகுல் காந்தி மாதிரிதான் . நயாராவில் ரஷ்ய முதலீடு உள்ளது. ஆகவே அது தற்பொழுது இந்தியாவில் விநியோகிக்கிறது. எப்படி இந்திய மக்களுக்கு இதனால் வரிச்சுமை அதிகரிக்கும்? சற்று சிந்தியுங்கள். எந்த பெட்ரோலை வாங்கினாலும் வரி உண்டு . முக்கியமாக தமிழக அரசின் வரி அதிகம். இதையும் நிறுத்தி விடலாமா?


ஆரூர் ரங்
ஆக 05, 2025 22:06

2 ஆண்டுகளாக உக்ரேன், இஸ்ரேல் போர்களால் உலக வர்த்தகம் பாதிக்கப்பட்டும் நம் நாட்டில் பெட்ரோல் விலை மூன்று முறை குறைக்கபட்டுள்ளது. இதற்குக் காரணம் ரஷ்ய எண்ணெய்தான்.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 05, 2025 22:37

"நம் நாட்டில் பெட்ரோல் விலை மூன்று முறை குறைக்கபட்டுள்ளது". சொல்லவே இல்லே ஆஸ்தான சங் சொன்னால் நம்புங்க பாஸ் .. அப்படித்தானே ?


சமீபத்திய செய்தி