உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெள்ளை மாளிகை எங்களுக்குத்தான்: சொல்கிறார் டிரம்ப்

வெள்ளை மாளிகை எங்களுக்குத்தான்: சொல்கிறார் டிரம்ப்

வாஷிங்டன்: 'தேர்தலில் வெற்றி பெற்று வெள்ளை மாளிகையை கைப்பற்றுவோம்' என அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது. குடியரசு கட்சி சார்பில், டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மோதுகின்றனர். நியூயார்க்கில் தேர்தல் பிரசாரத்தில், டொனால்டு டிரம்ப் பேசியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7x5do4ws&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கடவுளால் முறியடிக்கப்பட்டன!

40 ஆண்டுகளுக்குப் பிறகு நியூயார்க்கில் குடியரசுக் கட்சி வெற்றி பெறும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, குற்றச்சம்பவங்கள், பணவீக்கம் மற்றும் சட்டவிரோத குடியேற்ற பிரச்னைகளில் கவனம் செலுத்துவோம். நாங்கள் வெள்ளை மாளிகையை கைப்பற்றுவோம். நாட்டை சிறப்பாக வழிநடத்துவோம். சமீபத்தில் என்னை கொல்ல எடுத்த முயற்சிகள் எல்லாம் கடவுளால் முறியடிக்கப்பட்டன. நாட்டில் மதத்தை மீண்டும் கொண்டு வருவோம்.

எனக்கு ஓட்டளியுங்கள்!

அமெரிக்கர்கள் எனக்கு ஒரு மிக பெரிய மற்றும் வலுவான பணியை வழங்கி உள்ளனர். அமெரிக்காவை மீண்டும் அனைத்து அமெரிக்கர்களுக்கும் சிறந்ததாக மாற்ற நான் பணியாற்ற உள்ளேன். நாங்கள் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பெறப் போகிறோம். நியூயார்க் மக்களுக்கு நான் சொல்கிறேன். பயங்கரவாதிகள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இங்கு அதிகரித்து விட்டனர். அவர்களை கட்டுப்படுத்த எனக்கு ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Raghunathan
செப் 19, 2024 16:46

கவலையேபடாதே சகோதர .... உன் நண்பர் மோடி வந்து உன்னக்கு வாக்கு சேகரிப்பர்


என்றும் இந்தியன்
செப் 19, 2024 16:33

டிரம்ப் நேரு காங்கிரஸ் அங்கத்தினர் போலவே பேசுகின்றார்


P. VENKATESH RAJA
செப் 19, 2024 14:08

ட்ரம்ப் எப்படி தோல்வியடைவார் என நினைக்கிறேன். இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார்


Srinivasan K
செப் 19, 2024 22:08

kamala Harris is pro pakistani and anti indian. indians being US citizen can only vote and this could by 1 percent of voters indians cannot influence much


Srinivasan K
செப் 19, 2024 22:12

kamala Harris is controlled by us deep state who are against India, indian nationalist agenda and development her coming to power will not help US and as well india.