உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீன அதிபருடன் போனில் பேசினார் டிரம்ப்

சீன அதிபருடன் போனில் பேசினார் டிரம்ப்

வாஷிங்டன்: 'சீனாவுடனான உறவு மிகவும் வலுவானது' என ஜி ஜின்பிங் உடனான தொலைபேசி அழைப்புக்குப் பிறகு அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். ரஷ்யா-உக்ரைன் போர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் தைவான் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து அவர் விவாதித்தார்.

வலுவானது

இது தொடர்பாக, அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்கள் சிறந்த விவசாயிகளுக்காக நாங்கள் ஒரு நல்ல, மிக முக்கியமான ஒப்பந்தத்தைச் செய்துள்ளோம். அது இன்னும் சிறப்பாகும். சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் வலுவானது. இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.தைவானுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுத்தால் ஜப்பானின் ராணுவம் தலையிடும் என்று ஜப்பான் பிரதமர் சானே டகைச்சி சமீபத்தில் கூறியதைத் தொடர்ந்து இந்த உரையாடல் நடந்துள்ளது. ஜப்பான் அமெரிக்காவின் முக்கியமான நட்பு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ