உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் வர்த்தகப் போர் எதிரொலி: உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி

டிரம்ப் வர்த்தகப் போர் எதிரொலி: உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: உலக நாடுகளுக்கு பரஸ்பரம் வரி விதிப்பு செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.அமெரிக்க சந்தையில் பொருட்களை விற்பனை செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் தினமும் எச்சரிக்கை விடுத்து வந்தார். கூறியபடி உலகின் 180 நாடுகளுக்கு வரி விதிப்பை அறிவித்து அமல் செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்தியப் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.வரி விதிப்பால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.ஜப்பானில் நிக்கே 225 இன்டெக்ஸ், 2.8 சதவீதம், தென் கொரியாவின் கோஸ்பி இன்டெக்ஸ் 1 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ஹாங்காங்கின் ஹாங் செங் இன்டெக்ஸ் 1.5 சதவீதம் சரிந்தது.ஐரோப்பிய நாடுகளில் ஸ்டாக்ஸ் 600 இன்டெக்ஸ் 1.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் சி.ஏ.சி., 2.1 சதவீதமும், லண்டனில் எப்.டி.எஸ்.இ., 100 இன்டெக்ஸ் 1.3 சதவீதமும் சரிவை அடைந்தன.அமெரிக்க சந்தைகளும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. டவ் பியூச்சர்ஸ் 2.5 சதவீதமும், எஸ் அண்ட் பி 500 பியூச்சர்ஸ் 5 சதவீதமும் வீழ்ச்சி கண்டுள்ளன. நாஷ்டாக் 3.3 சதவீதம் சரிந்துள்ளது.இன்று இந்திய பங்குச்சந்தைகளும் வீழ்ச்சியை சந்தித்தன. நிப்டியில் ஐ.டி., பங்குகள் 4.21 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. ஆட்டோமொபைல் துறைக்கும் வரி விதிப்பு அமல் செய்யப்பட்டுள்ளதால், அந்த துறை பங்குகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன.ஆனால், பார்மா துறைக்கு வரி விதிப்பு எதுவும் இல்லை. இதனால் அந்த துறை பங்குகள் நிப்டியில் 2.25 சதவீதம் உயர்ந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Priyan Vadanad
ஏப் 03, 2025 20:42

முதல் ஆப்பு நண்பனுக்குத்தான் ... மூட நண்பனை விட கெட்டிக்கார எதிரி மேல் என்று எனது ஆசிரியர் பாடம் எடுத்தது நினைவுக்கு வருகிறது.இது திரு மூர்க்கன் பதிவு. இப்போது ஒருசிலருடைய மைண்ட் வாய்ஸ்: ஆப்பு என்றாலும் நாங்கள் ஜம்மென்று உட்கார்ந்து கொள்வோம்.


மூர்க்கன்
ஏப் 04, 2025 10:23

அப்புறம் ஆப்புல உக்காந்துகிட்டு குத்துதே குடையுதேன்னு சொல்லப்புடாது??


GMM
ஏப் 03, 2025 17:53

அமெரிக்கா சந்தையில் பிற நாட்டு பொருள் விற்பனை செய்தால் கூடுதல் வரி. நியாயம் தான் . பங்கு சந்தை வீழ்ச்சி எழுச்சி சகஜம். உலக தரமற்ற சீனா பொருள் மோகம் குறையும். அமெரிக்கா சுதேசி இயக்கத்தை கையில் எடுக்கிறது. எந்த தொழிலும் செய்யாமல் இயற்கை வளங்களை பயன் படுத்தி வாழும் நாடுகளுக்கு ஒரு டெஸ்ட். .


Srinivasan Krishnamoorthy
ஏப் 03, 2025 23:24

long term impact to Chinese exports to US and Europe. Chinese used to be manufacturing hub which is not going to be in the new world. Chinese economy to shrink unless they could find some alternative


ஆரூர் ரங்
ஏப் 03, 2025 17:40

1 இதனால் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வால் மக்களே வெறுப்படைந்து ஆட்சியை தூக்கியடித்தாலும் அடிப்பார்கள்.2. இரு கட்சிகளும் மாறி மாறி தவறு செய்கின்றன. அங்குள்ள பெரும்பாலான நீதிபதிகள் ஜனாதிபதிக்கு எதிராக இருப்பதால் இன்னும் பல தடையுத்தரவு பிரச்சினைகள் உருவாகும்.3 அங்கு குறைந்த, நடுத்தர சம்பளத்தில் வாழும் NRI க்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


Srinivasan Krishnamoorthy
ஏப் 03, 2025 23:26

American prices not impacted including ev cars, there is huge competition. Chinese dumping will be reduced


தமிழன்
ஏப் 03, 2025 17:39

இந்த கோமாளி கிறுக்கன் உலகத்தை அழிக்காமல் விடமாட்டான் போல என்ன எழவுக்குடா இவன வெற்றி பெற வெச்சீங்க??


Srinivasan Krishnamoorthy
ஏப் 03, 2025 23:27

you don't understand trump and his priorities for America. as a country we need to be self reliant. this applies to Chinese economy which was heavily dependent on American, euro exports


Haja Kuthubdeen
ஏப் 03, 2025 17:23

ட்ரம்ப் அடிப்படையில் தொழில் அதிபர்...அவரின் எண்ணமெல்லாம் வியாபார லாப கணக்கு மட்டுமே இருக்கும்.


Oru Indiyan
ஏப் 03, 2025 17:11

நம்ம ஊரு it நிறுவனங்களில் சம்பளம் அடி மாட்டு விலைக்கு போய் விடும். முப்பது வருடங்கள் வாழ்ந்தவனும் இல்லை. முப்பது வருடங்கள் தாழ்ந்தவனும் இல்லை.


அப்பாவி
ஏப் 03, 2025 16:58

இதுவரை அமெரிக்காவை சுரண்டிப் பிழைத்தார்கள். இப்போ அமெரிக்காவுக்கு போர்களிலும் வெற்றி இல்லை. டெக்நாலஜியிலும் முண்ணணி இல்லை. அமெரிக்கா லேட்டாக முழிச்சிக்கிட்டிருக்கு. அங்கே உற்பத்தியும், உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க ட்ரம்ப் முனைகிறார். அதற்கான முன்னெடுப்பே இந்த வரிகள். இது அமெரிக்க கார்ப்பரேட்களுக்கு தற்காலிக பின்னடைவைக் குடுத்தாலும் காலத்தின் கட்டாயம்.


Ramalingam Shanmugam
ஏப் 03, 2025 16:40

திருவோடு கொடுக்காம அமெரிக்காவை விட மாட்டார்


மூர்க்கன்
ஏப் 03, 2025 16:52

முதல் ஆப்பு நண்பனுக்குத்தான் ... மூட நண்பனை விட கெட்டிக்கார எதிரி மேல் என்று எனது ஆசிரியர் பாடம் எடுத்தார் நினைவுக்கு வருகிறது.


Srinivasan Krishnamoorthy
ஏப் 03, 2025 23:28

trump knows what is good for America


முக்கிய வீடியோ