உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா - பாக்., அமைதி பேச்சுவார்த்தையை விரும்பும் டிரம்ப்

இந்தியா - பாக்., அமைதி பேச்சுவார்த்தையை விரும்பும் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க டிரம்ப் விரும்புவதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மத்தியஸ்தம் செய்வதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் குறித்து, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் விரைவில் தணிய வேண்டும் என அதிபர் டிரம்ப் விரும்புகிறார். இரண்டு நாடுகளும் பல ஆண்டுகளாகவே ஒன்றுக்கொன்று முரண்பட்டுள்ளன என்பது அவருக்கு தெரியும். இருப்பினும், இரு நாடுகளின் தலைவர்களுடனும், டிரம்ப் நல்ல உறவைக் கொண்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ இரு நாடுகளின் தலைவர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Moorthy C
மே 10, 2025 16:38

ட்ரம்ப் நடகம் அடுக்கிறார்


Barakat Ali
மே 10, 2025 07:11

அமெரிக்காவைப் பற்றி உலகமே அறியும் ...... ஆயுதங்களையும் விற்கும் ....... போர் மூண்டால் நாடுகளுக்கிடையில் சமாதானமும் பேசும் .......


ராமகிருஷ்ணன்
மே 10, 2025 06:15

அமைதி வந்தால் உங்கள் ஆயுத வியாபாரம் படுத்துவிடுமே.


மீனவ நண்பன்
மே 10, 2025 02:42

உக்ரேன் ரஷ்ய போரை ஒரு நாளில் முடித்து வைப்பேன் என்று சொன்னார் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை