உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நீங்க தான் இதையும் செய்யணும்; ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி அதிபர் வலியுறுத்தல்

நீங்க தான் இதையும் செய்யணும்; ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி அதிபர் வலியுறுத்தல்

வாஷிங்டன்: ஈரான், இஸ்ரேல் போரை நிறுத்தியது போல், ரஷ்யா, உக்ரைன் சண்டையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று துருக்கி அதிபர் எர்டோகன், டிரம்பை வலியுறுத்தி உள்ளார்.ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் 12 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவிக்க, அதை உலக நாடுகள் வரவேற்று வருகின்றன.அந்த வகையில், அமெரிக்காவின் செயல்பாட்டை பாராட்டிய துருக்கி அதிபர் எர்டோகன், டிரம்பை நேரில் சந்தித்து போரை நிறுத்தியதற்கு பாராட்டு தெரிவித்தார். நேட்டோ உச்சி மாநாட்டின் போது டிரம்பை சந்தித்த அவர், போர் நிறுத்தத்தை வரவேற்பதாக கூறினார்.இதுகுறித்து துருக்கி அரசின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது; அமெரிக்க அதிபர் டிரம்ப் மூலம் ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.இதை துருக்கி அதிபர் எர்டோகன் வரவேற்றுள்ளார். இந்த போர் நிறுத்தம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். காசாவில் நடந்து வரும் மனித உரிமைகளுக்கு மீறிய செயல்களை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ரஷ்யா, உக்ரைன் போருக்கு டிரம்ப் தீர்வு கண்டு அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று எர்டோகன் வலியுறுத்தினார்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.முன்னதாக, துருக்கி அதிபர் எர்டோகன் உதவியுடன் உக்ரைன், ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று டிரம்ப் உறுதி அளித்து இருந்தது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Santhakumar Srinivasalu
ஜூன் 26, 2025 13:11

இவன் ஒரு சரியான பச்சோந்தி?


KRISHNAVEL
ஜூன் 25, 2025 18:42

பயபுள்ள கோர்த்த்து விடுது , இந்த கோமாளித்தனம் ரஷ்யா கிட்ட எடுபடாது


Ramesh Sargam
ஜூன் 25, 2025 12:47

உண்மையில் ஈரான், இஸ்ரேல் போர் முடிந்துவிட்டதா? முடிந்தது என்று செய்தி வந்தது. பிறகு மீண்டும் தாக்குதல் என்றும் செய்தி. போர் முடிந்தமாதிரி தெரியவில்லையே.


USER_2510
ஜூன் 25, 2025 11:28

புடின் யார் பேச்சையும் கேட்கமாட்டார் அதனால் போர் முடிவுக்கு வரும் என்று எதிர் பார்க்கக்கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை