உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இலங்கை தேர்தலில் திருப்பம்; 2ம் விருப்ப ஓட்டு எண்ணிக்கையில் அனுரா வென்றது எப்படி?

இலங்கை தேர்தலில் திருப்பம்; 2ம் விருப்ப ஓட்டு எண்ணிக்கையில் அனுரா வென்றது எப்படி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் அனுரா குமார திசநாயகே, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முதல் விருப்ப ஓட்டுகளில் யாருக்கும் 50 சதவீதம் கிடைக்காத நிலையில், இரண்டாம் விருப்ப ஓட்டுக்கள் அடிப்படையில் வெற்றியாளரை தேர்வு செய்தது தேர்தல் ஆணையம்.இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பதவிக்காலம் முடியும் நிலையில், நேற்று (செப்டம்பர் 21 ) அந்நாட்டில் அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. ஆர்வமுடன் ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் குவிய ஓட்டு சதவீதம் 75 ஆக பதிவானது. தேர்தல் நடந்த அன்றே ஓட்டுகளும் எண்ணப்பட்டன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=frmewtgb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில், இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் அனுர குமார திசநாயகே 39.52 சதவீத ஓட்டுக்களும், சஜித் பிரேமதாசா 34.28 சதவீத ஓட்டுக்களும் பெற்றனர். முதல் விருப்ப ஓட்டு எண்ணிக்கையில் யாருக்கும் 50 சதவீத ஓட்டுகள் கிடைக்கவில்லை. இதனால், 2ம் விருப்ப ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதன் அடிப்படையில் அனுரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

2ம் விருப்ப ஓட்டு எண்ணிக்கை எப்படி நடக்கும்?

* அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்திற்கு அதிகமான ஓட்டுகள் பெற வேண்டும். இலங்கையில் வாக்காளர்கள் அளிக்கும் தரவரிசை வாக்களிப்பை அடிப்படையாக வைத்து அதிபர் தேர்வு செய்யப்படுவார். வாக்காளர்கள் 3 வேட்பாளர்களை தங்கள் முன்னுரிமையாக குறிப்பிடலாம்.* முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகளை பெறாவிட்டால், 2ம் விருப்ப ஓட்டு எண்ணிக்கை நடக்கும். * 2வது சுற்றிலும் முடிவு எட்டப்படவில்லை என்றால், வாக்காளர்களின் 3வது விருப்ப ஓட்டுக்கள் பரிசீலிக்கப்படும்.* அனுரா திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசா ஆகிய இருவரை தவிர மற்ற வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர். * நீக்கப்பட்ட வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகளின் இரண்டாம் விருப்பம் பரிசீலனை செய்யப்படும். அதில் அதிகப்படியான ஓட்டுக்களை பெறுபவர் வெற்றியாளர்.* இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஓட்டு எண்ணிக்கை 2வது சுற்றுக்கு சென்றுள்ளது. இதன் முடிவில் அனுரா வெற்றி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kanns
செப் 22, 2024 21:51

If they have Failed to Secure Required50% Votes, ReElection Mustve been Ordered As II/III Choices Wdve Hovered among them with Further LessThan 50% OR Simple Majority be OKayed. Now SriLanka Will Go Backwards& Opportunist Communist


ديفيد رافائيل
செப் 22, 2024 15:51

இந்தியாவிலும் ஜனாதிபதி தேர்தலுக்கு மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தா இந்திய ஜனாதிபதியின் அதிகாரத்தில் எந்த வித அரசியல் கட்சி தலையீடும் இருக்கவே இருக்காது.


P. VENKATESH RAJA
செப் 22, 2024 15:16

எது எப்படியோ ரணில் மீண்டும் அதிபர் ஆகி விடக்கூடாது. ? அவர் ஆகினால் இந்திய மற்றும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அடிக்கடி கைது சம்பவங்கள் நடக்கும்


rama adhavan
செப் 22, 2024 21:10

இப்போ மட்டும் நடக்காதா? எந்த ஜனாதீபதியாவது தனது நாட்டின் எல்லை அந்நியரால் மீறும்போது பார்த்துக்கொண்டு இருப்பாரா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை