உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் ஈரானை உலுக்கிய 2 நிலநடுக்கங்கள்!

இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் ஈரானை உலுக்கிய 2 நிலநடுக்கங்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: ஈரானில் அணுமின் நிலையத்துக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையே மூண்டுள்ள போர் ஓயவில்லை. இருநாடுகளும் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் நிலையில், வடக்கு ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது.அங்கு தலைநகர் டெஹ்ரான் அருகில் உள்ள அணுமின் நிலையத்துக்கு அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மற்றொரு நிலநடுக்கம், செம்னான் மாகாணத்தில் இருந்து 22 மைல் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இங்கு தான் விண்வெளி மையம் மற்றும் ஏவுகணை வளாகம் அமைந்துள்ளது.மேலும், அதன் அதிர்வுகள் சோர்கே நகரைச் சுற்றிலும் உணரப்பட்டு உள்ளது. சோர்கே நகரம் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 150 கி.மீ., தொலைவில் உள்ளதாகும். நிலநடுக்கங்களினால் எவ்வித சேதமோ, உயிரிழப்போ ஏற்பட்டதா என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 21, 2025 22:40

சமீபத்திய தினமலர் செய்தியை பாருங்கள் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் பயங்கர சேதம் என்று புகைப்படத்தோடு செய்தி வந்திருக்கிறது ....அது நிலநடுக்கம் அல்ல இஸ்ரேல் தாக்குதலின் பாதிப்பு.... இப்படித்தான் இந்தியா பாகிஸ்தானை தாக்கும்போது நிலநடுக்கம் ஏற்பட்டது....!!!


Natarajan Ramanathan
ஜூன் 21, 2025 19:41

நில நடுக்கம் எல்லாம் இல்லை. இஸ்ரேல் போட்ட சக்திவாய்ந்த குண்டுகள்தான் அவை.


ராமகிருஷ்ணன்
ஜூன் 21, 2025 19:31

நிலநடுக்கமா அல்லது பங்கர்பாம் போடப்பட்டதா, இஸ்ரேல் அல்லது அமெரிக்கா–வால் போட்டதா.