| ADDED : ஜூன் 05, 2025 06:31 PM
ஜெருசலேம்: 20 மாதங்களுக்கு பின் பிணைக்கைதிகள் 2 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. 'அனைத்து பிணைக்கைதிகளையும் மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது' என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.2023ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகும் நீடிக்கிறது. தங்கள் நாட்டில் இருந்து காசா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்ற பிணைக்கைதிகளை மீட்க அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hkdcszjs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்களில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பிணைக் கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுத குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டன.இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட பிணைக்கைதிகளில் ஜூடி வெயின்ஸ்டெயின் (70), கட் ஹக்காய் (72) ஆகிய இரண்டு பேரின் உடல்களை மீட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.அவர், 'அனைத்து பிணைக்கைதிகளையும் மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது. இஸ்ரேலின் அனைத்து மக்களுடன் நானும், எனது மனைவியும் இணைந்து, அவர்களுடைய அன்பான குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். துயர் மிகுந்த இந்த இழப்பால் எங்கள் இதயங்கள் வேதனையடைகின்றன' என தெரிவித்துள்ளார்.