உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பணி விசாவில் கை வைக்குது பிரிட்டன்: இந்தியர்களுக்கு பாதிப்பு வருமா ?

பணி விசாவில் கை வைக்குது பிரிட்டன்: இந்தியர்களுக்கு பாதிப்பு வருமா ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: வெளிநாட்டில் இருந்து பிரிட்டனுக்கு வேலைக்கென வருவோருக்கு சில புதிய நடைமுறைகளை கொண்டு வர பிரிட்டன் திட்டமிட்டிருக்கிறது. பிரிட்டன் பிரதமர் ஹேர் ஸ்டார்மர் , பிரிட்டன் உள்துறை அமைச்சகம் மற்றும் புலம்பெயர்வோருக்கான ஆலோசனை கமிட்டிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வெளிநாட்டில் இருந்து பணி நிமித்தமாக பிரிட்டனுக்கு வருவோருக்கு பணி நிமித்த விசாவில் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து யோசனை வழங்குமாறு கேட்டுள்ளார். தகவல் தொழில் நுட்பம், தொலைதொடர்பு, இன்ஜினியரிங் துறையில் வெளிநாட்டவர்கள் பணியில் இருப்பதை குறைக்க முடியுமா, மேலும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் , இதில் வருமான உச்சவரம்பில் மாற்றம் கொண்டு வருவது உள்ளிட்ட விஷயங்களில் ஆலோசனை கேட்டுள்ளார். இந்த அறிக்கையை 9 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பிரிட்டன் உயர் அதிகாரிகள் கூறுகையில்; பொதுவாக பிரிட்டனின் வளர்ச்சியில் வெளிநாட்டவர்கள் பங்கு மிக முக்கியம். அவர்களை நாங்கள் மதிக்கிறோம். இருப்பினும் பிரிட்டனில் குடியிருப்போருக்கும் , உள்ளூர் மக்களுக்கும் வேலை உறுதி தன்மையை நிலைநிறுத்தவே இந்த முயற்சி என கூறியுள்ளனர்.

இந்தியர்களே அதிகம்

வெளிநாடுகளில் இருந்து பிரிட்டனில் பணிபுரிவோர் எண்ணிக்கையில் இந்தியர்களே அதிகம் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதனால் இந்தியர்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு வரும் என்பது போக, போக தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sivagiri
ஆக 12, 2024 19:40

ஆப்ரிக்க , அரேபிய , ஈரான் ஈராக் துருக்கி போன்ற நாடுகளில் இருந்து அகதிகள் என்று தஞ்சம் அடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் , புலம் பேர்ந்த முஸ்லிம்களை கட்டுப்படுத்த வேண்டி இருக்கு போல , இப்போ மெல்ல மெல்ல இங்கிலாந்த் முஸ்லிம் நாடாக ஆக்கிக் கொண்டிருப்பதும் , இப்போ நடக்கும் கலவரங்களும் காரணம் காரணம் என்று சொல்லப் படுகிறது ,


ஆரூர் ரங்
ஆக 12, 2024 17:28

நம்மிடம் கொள்ளையடித்து பணக்கார நாடான இங்கிலாந்தில் நம் ஆட்களே அடிமைகளாக பணி செய்ய வாய்ப்புக்கு அலையும் கொடுமை. வெட்கக்கேடு. ஆனா அந்நாடு சீக்கிரமே திவாலாக போவதாக செய்திகள்.


தஞ்சை மன்னர்
ஆக 12, 2024 20:21

வயிறு எரியுதோ எதோ சொல்ல வர்ற முடியாததால் முழுங்குற அவன் போய் 77 வருடம் ஆச்சி உன் கூட்டம் புது ரயில் தடம் போட்டு இருந்தால் தைரியமாக பதிவு செய்


Iniyan
ஆக 12, 2024 17:05

அப்போ ஒரு தமிழனும் வடக்கில் போய் வேலை பார்க்கவில்லையா? ஒன்றும் தெரியாமல் உளற வேண்டாம்.


ramarajpd
ஆக 12, 2024 16:59

உலகம் முழுவதும் உள்ள பாகிஸ்தானியர்கள் அங்கு இந்தியன் என சொல்லிக் கொள்கிறார்கள்.


Jai
ஆக 12, 2024 16:49

இங்கிருந்து செல்லும் இந்தியர்கள் இந்த நாட்டின் எதிர்கால தூண்கள். இந்த தூண்களை வாரி எடுத்துக்கொண்டு அங்கு குடியேற்றம் கொடுப்பதால் தான் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. சட்ட ஒழுங்குகளை சரி செய்து திறமையானவர்கள் வாழ்வதற்கான நல்ல சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுத்தால்தான் திறமையானவர்கள் இங்கேயே இருப்பார்கள்.


nagendhiran
ஆக 12, 2024 16:24

வடக்கன் தமிழ்நாடு வருவதுபோல? உலகிற்கு நம்ம நாட்டுகாரன்தான் வடக்கன்ஸா?


Iniyan
ஆக 12, 2024 15:35

பிரிட்டனில் ஒரு தகுதியும் இல்லாத சட்ட விரோத பாகிஸ்தானியர் மற்றும் அரபு நட்டவரும்தான் அதிகம். ஆனால் இவர்கள் ஸ்டாமெரின் தொழிலாளர் கட்சியின் ஓட்டு வங்கி. அதனால் தான் அவர் நம்மவர்களை குறி வைக்கிறார். இடதுசாரி கட்சிகள் என்றுமே ஆபத்தானவை.


தஞ்சை மன்னர்
ஆக 12, 2024 20:22

அப்போ சாப்பிடுவதற்கு என்ன செய்யகின்றான் புரிய தனமாக பேசகூடாது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை