உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது; ஐநா பகீர் குற்றச்சாட்டு

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது; ஐநா பகீர் குற்றச்சாட்டு

நியூயார்க்: காசாவில் இஸ்ரேல் இனப் படுகொலை செய்து உள்ளது என ஐ.நா. விசாரணை கமிஷன் தெரிவித்து உள்ளது.மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023ல் ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்; 251 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை துவக்கியது. இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ள இந்தப் போரில், இதுவரை 62,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வர பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அதேநேரத்தில், பசி, பட்டினியால் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் என பலர் உயிரிழக்கும் அவலம் காசாவில் தொடர்கிறது.இந்நிலையில், காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல், இனப்படுகொலையை செய்வதாக ஐநாவின் விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இது குறித்து ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனியல் மெரோன் கூறுகையில்,' இந்த அறிக்கை போலியானது. ஹமாஸ் படையினரால் எழுதப்பட்டது. பொய்யான அவதூறுகளை பரப்புகின்றனர்' என்றார்.இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்ரேலில் இனப்படுகொலைக்கு முயன்றது ஹமாஸ் ஆகும். 1,200 பேரைக் கொன்றது, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது. பல்வேறு குடும்பங்களை உயிருடன் எரித்தது. மேலும் ஒவ்வொரு யூதரையும் கொல்லும் இலக்கை ஹமாஸ் படையினர் வெளிப்படையாக அறிவித்தனர்.வேறு எந்த நாடும் இந்த நிலைமைகளில் செயல்பட்டு போர்க்களத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் தீங்குகளைத் தடுக்க இவ்வளவு செய்ததில்லை. இந்த அறிக்கை ஆதாரமற்றது. இஸ்ரேல் தனது மக்களைப் பாதுகாத்து, பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்டு வர முயற்சிக்கிறது.யூத அரசைக் குறை கூறுவதிலும், ஹமாஸின் அட்டூழியங்களை மூடி மறைப்பதிலும், பாதிக்கப் பட்டவர்களைக் குற்றம் சாட்டப் பட்டவர்களாக மாற்றுவதிலும் ஐநா விசாரணை கமிஷன் நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Nandakumar Naidu.
செப் 17, 2025 04:54

அப்போ, ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலில் செய்தது என்ன ஐ நா அட போங்க நீங்களும் உங்க ஐ நா வும்.


நிக்கோல்தாம்சன்
செப் 16, 2025 22:34

முதலில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டிக்க துப்பில்லை வந்துட்டானுங்க . செம்மணி பற்றிய சமீபத்திய கட்டுரை மனதை உலுக்கியது ஐநா


மனிதன்
செப் 16, 2025 21:16

உலகத்துல இருக்க அறிவாளி பூரா இதோ இங்கதான் இருக்காங்க.... ரொம்ப தெரிஞ்சவனுங்க... கொடும....


SP
செப் 16, 2025 21:04

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கையை இதுவரை ஐ நா சபை கூறியிருக்கின்றதா? பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை விடுவிக்க வேண்டும் என்றாவது ஒரு அறிக்கை விட்டு உள்ளீர்களா? இஸ்ரேலில் வன்முறையில் இறங்கிய ஹமாஸ் தீவிரவாதிகளின் செயலுக்கு காஸாவில்உள்ளமக்கள் ஆதரவு தந்து பட்டாசு வெடித்து கொண்டாடினார்களே அப்படி இருக்க இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டியது தான்.


Hindu
செப் 16, 2025 20:57

ஐநா சொல்வதை யாரும் காதுகொடுத்து கேட்பதில்லை.


D Natarajan
செப் 16, 2025 20:21

UN ஒன்றுக்கும் உதவாத கேடுகெட்ட கட்டமைப்பு. ஏன் ஹமாஸ்ஸிடம் இஸ்ரேலியரை விடுதலை செய்ய சொல்லக் கூடாது.


Saai Sundharamurthy AVK
செப் 16, 2025 20:12

புல்வாமா, பஹல்காம் தாக்குதலின் போது ஐ.நா ஏன் பாகிஸ்தானை கண்டிக்கவில்லை ??? பாகிஸ்தானுக்கு உதவிய அமெரிக்காவை ஏன் கண்டிக்கவில்லை???


viswanathan mb
செப் 16, 2025 20:11

யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பின்பு எழுச்சி பெற்றனர். அவர்களை அழிக்க முஸ்லீம் நாடுகள் காத்திருக்கின்றன.


SUBBU,MADURAI
செப் 16, 2025 19:46

ஐநாவையெல்லாம் யார் மதிக்கிறார்கள் அது ஒரு பல் இல்லாத பாம்பு


பேசும் தமிழன்
செப் 16, 2025 19:34

அப்படியா..... இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி இனப்படுகொலை செய்த போது நீங்கள் எல்லாம் எங்கே போய் இருந்தீர்கள்..... கோமாவில் இருந்தீர்களா ???.... அவ்வளவு ஏன் இஸ்ரேல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது எங்கே போய் இருந்தீர்கள் ???.... ஒருத்தருக்கு வந்தால் ரத்தம்..... அடுத்தவர்களுக்கு என்றால் தக்காளி சட்டினியா ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை