உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் இஸ்ரேல் தாக்குதல்; பெண்கள், குழந்தைகள் உட்பட 112 பேர் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்; பெண்கள், குழந்தைகள் உட்பட 112 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 112 பேர் உயிரிழந்தனர்.காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.மேலும், 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 48,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் முயற்சியால் இரு தரப்பிற்கும் இடையே கடந்த ஜன., 19 முதல் 42 நாட்களுக்கு முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமல் செய்யப்பட்டது. இருப்பினும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இருதரப்பும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டின. பிணை கைதிகளை விடுவிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களால் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், வடக்கு காசாவில் உள்ள பள்ளி முகாம்கள் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 112 பேர் உயிரிழந்தனர். இதனால் காசாவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

c.mohanraj raj
ஏப் 04, 2025 13:24

விரைவாக முடித்து விட்டு வேறு வேலையை பார்க்க வேண்டும் இஸ்ரேல்


Sampath Kumar
ஏப் 04, 2025 13:14

இந்த தாக்குதல் காட்டு மிராண்டி தனம் காட்டுமிராண்டிகளிடம் இதை தவிர வேறு ஏதையும் ஏதிர்பார்க்க கூடாது போர் நிறுத்தம் ஒருபக்கம் பேச்சு மறுபக்கம் தாக்கு ஆக இந்த ஏழு ஏடுத்த இஸ்ரேலிகளால் உலக போர் வருவதை தடுக்க முடியாது


Karmegam,Sathamangalam
ஏப் 04, 2025 08:55

இஸ்ரேலுக்கு இதைவிட ஒரு நல்ல சான்ஸ் கிடைக்காது கடைசி பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகள் இருக்கும் வரை காஸாவை சல்லடையாக துளைக்க வேண்டும் அப்போதுதான் மூர்க்கன்களின் கொட்டம் அடங்கும் இஸ்ரேல் பெயரை கேட்டாலே குலை நடுங்கும் அளவிற்கு அந்த நகரத்தை தரைமட்டமாக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு துணை போன பாலஸ்தீன மக்கள் இன்னும் ஐம்பது வருடங்களுக்கு அகதிகளாய் பல நாடுகளுக்கு அலைய வேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு புத்தி வரும்.