நமீபியாவில் யு.பி.ஐ., பண பரிவர்த்தனை; பிரதமர் உடனான சந்திப்புக்கு பின் அறிவிப்பு
வின்ஹோக் : நம் நாட்டின் தேசிய பரிவர்த்தனை கழகத்தின் டிஜிட்டல் தொழில்நுட்பமான யு.பி.ஐ.,யை நமீபியாவில் விரைவில் செயல்படுத்த உள்ளதாக பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பின் அந்நாட்டு அதிபர் நெடும்போ நந்தி-ன்டைட்வா அறிவித்தார்.பிரதமர் மோடி ஜூலை 2ல் ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் புறப்பட்டார். பிரேசிலில் பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக்கொண்டு கடைசி நாடாக நேற்று, தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவுக்கு சென்றார். அங்கு அதிபர் நந்தி-ன் டைட்வாவை சந்தித்து பேசினார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த சந்திப்பில், நமீபியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு நம் நாட்டு தொழில்நுட்பமான யு.பி.ஐ.,யை பயன்படுத்துவது, தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் அமைப்பது, சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.நம் அரசின் ஆதரவு பெற்ற சி.டி.ஆர்.ஐ., எனப்படும் பேரிடர் ஆபத்துகளை தாங்கும் உள்கட்டமைப்புகள் அமைப்பில் நமீபியா இணைந்தது. நமீபியா அதிபருடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி சமூக வலைதள பதிவில் கூறியதாவது: டிஜிட்டல் தொழில்நுட்பம், ராணுவம், விவசாயம், சுகாதாரம், கல்வி, பெட்ரோ கெமிக்கல் ஆகிய துறைகள் குறித்து எங்கள் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. 'புராஜெக்ட் சீட்டா' திட்டத்தின் கீழ் சிவிங்கி புலி வழங்கியதற்காக நன்றியை வெளிப்படுத்தினேன்.இவ்வாறு அவர் கூறினார். 27வது உயரிய விருது
நமீபியா சென்ற பிரதமருக்கு அந்நாட்டின் உயரிய, 'ஆர்டர் ஆப் த மோஸ்ட் ஏன்ஷியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸ்' விருது வழங்கப்பட்டது. இதில் வெல்விட்சியா மிராபிலிஸ் என்பது நமீபியாவின் தனித்துவமான மற்றும் பழமையான பாலைவனத் தாவரம். நீண்ட ஆயுளையும், உறுதியையும் குறிக்கிறது. இது பிரதமர் மோடி பெற்ற 27வது சர்வதேச உயரிய விருது.
27வது உயரிய விருது
பெற்ற பிரதமர் மோடிநமீபியா சென்ற பிரதமருக்கு அந்நாட்டின் உயரிய 'ஆர்டர் ஆப் த மோஸ்ட் ஏன்ஷியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸ்' விருது வழங்கப்பட்டது. இதில் வெல்விட்சியா மிராபிலிஸ் என்பது நமீபியாவின் தனித்துவமான மற்றும் பழமையான பாலைவனத் தாவரம். இது நீண்ட ஆயுளையும், உறுதியையும் குறிக்கிறது. இது பிரதமர் மோடி பெற்ற 27வது சர்வதேச உயரிய விருது.