உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை; வீடியோ வெளியிட்டு அமெரிக்கா எச்சரிக்கை

சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை; வீடியோ வெளியிட்டு அமெரிக்கா எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் நாடு கடத்தப்படும் விமானத்தில் ஏறுவதற்கு தயாராகும் இருக்கும் சட்டவிரோத குடியேறிகள் வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்க அதிபராக, ஜன.20ல் டிரம்ப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, மும்முரமாக சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lvcg9qme&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று (பிப்., 19) சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை, என்று நாடு கடத்தப்படும் விமானத்தில் ஏறுவதற்கு தயாராகும் இருக்கும் சட்டவிரோத குடியேறிகள் வீடியோவை அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.41 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், ஒரு அதிகாரி, கட்டப்பட்ட ஒரு மனிதனை நாடு கடத்தல் விமானத்தில் ஏற தயார்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஒரு அதிகாரி ஒரு கூடையிலிருந்து சங்கிலிகள் மற்றும் கைவிலங்குகளை வெளியே எடுக்கிறார். இந்த வீடியோவிற்கு, தொழில் அதிபர் எலான் மஸ்க் 'ஹாஹா வாவ்' என கருத்து தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

SUBRAMANIAN P
பிப் 19, 2025 17:39

உண்மை பெயரில் கருத்து போடற துணிவு கூட சில ஆண்மகன்களுக்கு இல்லை.


Haja Kuthubdeen
பிப் 19, 2025 19:28

அதாவது பரவா இல்லைங்க..பலர் மதத்தையே மாத்திக்கிறாங்க கருத்து பகுதியில்...கொடுமை...


nanban
பிப் 19, 2025 13:39

பேசாம இவங்கள மாதிரி ஆட்களை எல்லாம் வட கொரியாவுக்கு அனுப்பிட்ட என்னனு தோணுது


Kasimani Baskaran
பிப் 19, 2025 13:26

கள்ளக்குடியேறிகளுக்கும் கூட ஜாமீன் கொடுக்கும் ஒரே மாநிலம் உலகத்தில் உண்டு என்றால் அது திராவிடர்கள் ஆளும் மாநிலம்தான். நாளைக்கு பெண் கொடுத்துக்கூட உபசரிப்பார்கள். பிறக்கும் குழந்தை மதச்சார்பற்றதாக இருக்கும்.


Barakat Ali
பிப் 19, 2025 13:02

இந்தியாவிலுள்ள ரோஹிங்கியா, வங்கதேசிகளை இப்படி மோடியால் / ஷா வால் அனுப்பிவிடத் துணிவிருக்கிறதா ????


வாய்மையே வெல்லும்
பிப் 19, 2025 13:21

பரக்கத் அலி .. ராவுளுக்கு முதலில் உங்களை ஆதரிக்காமல் இருக்க துணிவு இருக்கிறதா என்பதை அல்லவே நீங்க கேட்டு இருக்கணும் .. மோடியால்கள்ளக்குடிகளை தூக்கி எரிய முடியும் என்பதை உணர்த்த நாள் வெகுதொலைவில் இல்லை மூர்க்கர்களுக்கு இது ஒரு எச்சரிசிக்கை மணி


venugopal s
பிப் 19, 2025 14:33

அவ்வளவு தைரியமுள்ள ஆண்மகன் யாரும் பாஜகவில் இல்லையே!


enkeyem
பிப் 19, 2025 16:41

காஷ்மீரில் 370 ஐ நீக்க காங்கிரசுக்கு தான் துப்பில்லை. ஆனால் மோடி செய்து காட்டினார். அப்புறம் எண்ணாததை கிழித்து விட்டீங்க? அதுபோல எல்லா கல்லாக குடியேறிகளையும் விரைவில் மோடி வெளியேற்றும் காலம் வெகு விரைவில் உள்ளது. சும்மா உதார் விடவேண்டாம்


Haja Kuthubdeen
பிப் 19, 2025 19:14

ஏனப்பா உனக்கு இந்த சவால்...கருத்து பகுதியில் வரணும் என்பதற்காக எதையாவது எழுதுவீரா...


P.Sekaran
பிப் 19, 2025 13:00

சட்ட விரோதி குடியேரியவர்களுக்கு வக்காளத்து வாங்கும் கட்சிகள் யாவும் ஊழலுக்கு துணை போகிறவர்கள். நூற்றுக்கு முக்கால் வாசி கட்சிகள் ஊழலுக்கு வக்காளத்து வழங்குபவர்கள் தான். ஊழல் இல்லையென்றால் அரசியல் நடத்தமுடியாது என்பவர்கள்தான். இவர்கள் எல்லாம் கொடியவர்கள்


karthik
பிப் 19, 2025 12:32

இதே போல நம்நாட்டில் நுழைந்திருக்கும் பங்களாதேஷ் மியான்மர் நாட்டிலிருந்து நுழைந்து இருக்கும் ஆட்களை வெளியேற்ற வேண்டும்.


kumarkv
பிப் 19, 2025 12:24

இந்த நிலை அமேரிக்கர்களுக்கு வர வெகு சீக்கிரத்துல அமையும்


Venkatesan Srinivasan
பிப் 19, 2025 16:58

சட்டவிரோத குடியேறிகளை கையாள்வது எப்படி என்பதற்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இந்த நிகழ்வு அமையலாம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக வல்லரசு நாடு தன் இறையாண்மை காக்கும் பொருட்டு எடுத்துள்ள நடவடிக்கை. அவர்கள் நாடு அவர்கள் பாதுகாப்பு. மேலும் வேண்டாத விருந்தாளிகளை இவ்வளவு மட்டும் உயிர் சேதாரம் இன்றி பாதுகாப்புடன் அவரவர் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் கண்ணியத்தை பாராட்டியே தீர வேண்டும். இதுவே வேறு அரபு தேசங்களோ அல்லது மத்திய தரைக்கடல் நாடுகளாக இருந்திருந்தால் சொல்லொணா கொடுமைகள் நடந்திருக்கும். இங்கே இதற்கு கண்டனம் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள் இவ்வாறு நம்நாட்டில் உள்ள கள்ள குடியேறிகளை எத்தகைய உள்நோக்கத்துடன் ஆதரிக்கின்றன என்பது தெள்ளத்தெளிவாக உள்ளது. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே.


RK
பிப் 19, 2025 12:13

சட்டவிரோத குடியேறிகளுக்கு காங்கிரஸ் கட்சி பரிந்து பேசுவது குற்றவாளிகளை ஊக்குவிக்கிறது என்றே தோன்றுகிறது.


RK
பிப் 19, 2025 12:13

சட்டவிரோத குடியேறிகளுக்கு காங்கிரஸ் கட்சி பரிந்து பேசுவது குற்றவாளிகளை ஊக்குவிக்கிறது என்றே தோன்றுகிறது.


முக்கிய வீடியோ