பிரான்ஸ் யூதர் எதிர்ப்பு குறித்து கருத்து ; அமெரிக்க துாதருக்கு சம்மன்
பாரிஸ்: யூத எதிர்ப்பு கருத்து வெளியிட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, அமெரிக்க துாதர் சார்லஸ் குஷ்னருக்கு, பிரான்ஸ் அரசு 'சம்மன்' அனுப்பியுள்ளது.ஐரோ ப்பிய நாடான பிரான்சுக்கான அமெரிக்க துாதராக உள்ளவர் சார்லஸ் குஷ்னர். இவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் சம்பந்தி. சார்லஸ் குஷ்னரின் மகன் ஜாரெட் குஷ்னர், டிரம்பின் மகள் இவான்காவை கடந்த 2009ல் மணந்துள்ளார். இந்நிலையில், பிரிட்டன் பத்திரிகை ஒன்றில் வெளியிட்ட கட்டுரையில், யூதர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க போதுமான அளவு நடவடிக்கை எடுக்க பிரான்ஸ் அரசு தவறிவிட்டதாக சார்லஸ் குஷ்னர் எழுதியுள்ளார். 'சார்லஸ் குஷ்னர் கூறிய குற்றச்சாட்டுகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இதுபற்றி விளக்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது' என, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.