உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  அமெரிக்கா 29 நாடுகளுக்கான துாதர்களை திரும்ப பெறுவதாக அறிவிப்பு

 அமெரிக்கா 29 நாடுகளுக்கான துாதர்களை திரும்ப பெறுவதாக அறிவிப்பு

வாஷிங்டன்: உலகின்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் தன் நிர்வாகத்தை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், தன் கொள்கைக்கு இணங்கக்கூடிய துாதர்களை நியமிக்கும் வகையில், 29 நாடுகளைச் சேர்ந்த துாதர்களை திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளார். ஆப்ரிக்காவில் 13, ஆசியாவில் 10, ஐரோப்பாவில் 4 உட்பட 29 துாதர்கள் திரும்பப் பெறப் படுகின்றனர்.முந்தைய அதிபர் ஜோ பைடன் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட இந்த 29 துாதர்களுக்கும், வருகிற ஜனவரி மாதத்துக்குள் பதவியில் இருந்து விலக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு திரும்பியதும் வெளியுறவுத் துறையின் பிற பணிகளில் அமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை