| ADDED : பிப் 14, 2025 07:04 AM
வாஷிங்டன்: பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.மஹாராஷ்டிராவின் மும்பையில், 2008ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் - இ - தொய்பா அமைப்புக்கு உதவியதாக பாக்., வம்சாவளியைச் சேர்ந்த தஹாவூர் ராணா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அமெரிக்க கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில், கடந்த 2013ல் ராணாவுக்கு 14 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rbo5ddae&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையே ராணாவை நாடு கடத்தக் கோரி அமெரிக்காவிடம் நம் நாட்டு அரசு கோரிக்கை வைத்தது. இதையேற்று, நாடு கடத்த நீதிமன்றம் 2023ல் உத்தரவு பிறப்பித்தது. நாடு கடத்தலுக்கு தடை கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ராணா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தான். இந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி வழங்கியது.இதன் வாயிலாக, நாடு கடத்தலுக்கு எதிராக ராணா மேற்கொண்ட கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்தது. ராணாவை நாடு கடத்தி கொண்டு வர என்.ஐ.ஏ., குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். தற்போது, ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து, டொனால் டிரம்ப் கூறியதாவது: சதித்திட்டம் தீட்டியவர்களில் ஒருவரையும், உலகின் மிகவும் தீயவர்களில் ஒருவரையும், மும்பை பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவரையும் இந்தியாவில் நீதியை எதிர்கொள்ள நாடு கடத்துவதற்கு எனது நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நீதியை எதிர்கொள்ள இந்தியா திரும்புகிறார்.உலகம் முழுவதும், பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியாவும், அமெரிக்காவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இணைந்து செயல்படும். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் நாங்கள் ஒத்துழைப்போம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை. இவ்வாறு அவர் கூறினார். பயங்கரவாதி தஹாவூர் ராணாவை நாடு கடத்த முடிவு செய்ததற்காக, அதிபர் டிரம்பிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.