உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஏமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 74 பேர் பலி; 171 பேர் காயம்

ஏமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 74 பேர் பலி; 171 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், 74 பேர் உயிரிழந்தனர். 171 பேர் பலத்த காயம் அடைந்தனர்.ஹமாஸ் படையினருக்கு, அண்டை நாடான ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்து வருகிறது. செங்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில், அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், ஏமனில், ஹவுதி பயங்கரவாத அமைப்பு வலுவாக உள்ள பகுதிகளில், அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், 74 பேர் உயிரிழந்தனர். 171 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எரிபொருள் சப்ளையை துண்டிப்பதற்காக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்றும், அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
ஏப் 18, 2025 17:10

அமெரிக்க மீது UN ஏன் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை


JaiRam
ஏப் 18, 2025 14:39

ஈரான் இறங்கிவிடும் பூரான் இறங்கிவிடும் என இங்கு ஒரு கும்பல் கதறிக் கொண்டிருந்தது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை