உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் கொலை: அமெரிக்கா கண்டனம்

வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் கொலை: அமெரிக்கா கண்டனம்

வாஷிங்டன்: வங்கதேசத்தில் ஹிந்து மதத்தை சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது: வங்கதேசத்தில் அனைத்து வகையான மத வன்முறைகளையும் சந்தேகத்துக்கு இடமின்றி அமெரிக்கா கண்டிக்கிறது. அங்கு வசிக்கும் அனைத்து உறுதி செய்ய சமூக மக்களின் பாதுகாப்பை வங்கதேச இடைக்கால அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். மத சுதந்திரம், கருத்து சுதந்திரம் , அமைதியான கூட்டம் ஆகியவற்றுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.இதனிடையே அமெரிக்க எம்பி ரோ கண்ணா, வெறுப்பு மற்றும் மதவெறியின் இந்த மோசமான செயல்களுக்கு எதிராக குரல்கள் எழுப்பப்பட வேண்டும் எனக்கூறியிருந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் திபு சந்திர தாஸ் என்ற ஹிந்து மத இளைஞரை கும்பல் ஒன்று கொடூரமாக அடித்து கொன்றது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், ராஜ்பாரி மாவட்டத்தில் அம்ரித் மண்டல்(29) என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவங்களுக்கு வங்கதேச இடைக்கால அரசு கண்டனம் தெரிவித்து இருந்தது.இதனிடையே, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் கொல்லப்படுவதை கண்டித்து, உலகின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது.இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரிட்டன் தலைநர் லண்டனில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு வங்காள ஹிந்து ஆதர்ஷ சங்கம் போராட்டம் நடத்தியது. நேபாளத்திலும் பல இடங்களில் போராட்டம் நடந்தன. பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.டில்லி, கோல்கட்டா ஆகிய நகரங்களிலும் போராட்டம் நடந்தது. ஹிந்துக்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, அவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி