உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு; தடை விதித்தது வர்த்தக நீதிமன்றம்

உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு; தடை விதித்தது வர்த்தக நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதிக வரி விதிப்புக்கு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு வரியை உயர்த்தினார். இதில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் நம் நாட்டு தயாரிப்புகளுக்கான வரி 27 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பின்னர் வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hjor5nyf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டிரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் பல மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த, வர்த்தக நீதிமன்றம் உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதிக வரி விதிப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டது. வரிகளை நியாயப்படுத்த டிரம்ப் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியதை நீதிமன்றம் நிராகரித்தது. அனைத்து உலக நாடுகள் மீதும் ஒருதலைப்பட்சமாக வரி விதிக்கும் அதிகாரத்தை அதிபருக்கு வழங்கவில்லை. அதிபர் டிரம்ப் தனக்கு அளித்த அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளார் என்று சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பு வெளியானதும் டிரம்ப் நிர்வாகம் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
மே 29, 2025 22:23

அங்கேயும் தீர்ப்பு. தீர்ப்பு வந்தவுடன் மேல்முறையீடு எல்லாம் வழக்கத்தில் உள்ளது.


GMM
மே 29, 2025 17:55

அமெரிக்காவின் அதிக வரி விதிப்புக்கு எதிராக ஒருதலைபட்சமாக தடை போட நீதிபதிக்கு அதிகாரம். ஆனால். ஒருதலைபட்சமாக வரி விதிக்கும் அதிகாரத்தை அதிபருக்கு சட்டம் வழங்கவில்லை என்று சர்வதேச வர்த்தக நீதிபதி தீர்ப்பு. நிர்வாகத்தை அடக்கவில்லை என்றால், நீதிபதிக்கு தூக்கம் வராது. ?


Gopalakrishnan Thiagarajan
மே 29, 2025 16:57

அமெரிக்க நீதி மன்றமா அல்லது சர்வதேச நீதி மன்றமா.


visu
மே 29, 2025 21:00

அது சர்வதேச நீதிமன்றம் அதன் தீர்ப்புகளை யாரும் மதிப்பதில்லை


புதிய வீடியோ