உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் இருந்து பஞ்சாப் வந்தது 2வது விமானம்; 116 இந்தியர்கள் வருகை

அமெரிக்காவில் இருந்து பஞ்சாப் வந்தது 2வது விமானம்; 116 இந்தியர்கள் வருகை

சண்டிகர்: சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் 116 பேரை ஏற்றிக் கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் அமிர்தசரஸில் தரையிறங்கியது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், அந்நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் வெளியேற்றப்படுகின்றனர். கடந்த மாதம் ஜனவரி 20ம் தேதி, 104 இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் 2வது கட்டமாக நேற்றிரவு 11.35 மணியளவில் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு, 119 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 67 பேர் பஞ்சாப், 33 பேர் ஹரியானா, எட்டு பேர் குஜராத், மூன்று பேர் உத்தர பிரதேசம், தலா இருவர் கோவா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தலா ஒருவர் ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆவணம் சரிபார்ப்பு உள்ளிட்டவைக்கு பிறகு தங்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இன்று 3வது அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் வந்தடைய உள்ளது. இந்த விமானத்தில் 157 இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்.வாரத்துக்கு இரண்டு விமானங்கள் வாயிலாக, இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் குறைந்தபட்சம் 7.25 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக, வாஷிங்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'பியூ' என்ற ஆய்வு அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

venugopal s
பிப் 16, 2025 16:47

டிரம்ப் அண்ணே, நான் கஷ்டப்பட்டு கட்டி அமைத்த குஜராத் மாடல் நாறிப் போய் விடும். அதனால் குஜராத்திகளை இப்போது திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கெஞ்சுவதற்குத் தான் அமெரிக்க பயணமா?


பேசும் தமிழன்
பிப் 16, 2025 19:16

திருட்டுத்தனமாக யார் போய் இருந்தாலும் அடித்து விரட்ட தான் செய்வார்கள்..... பங்களாதேஷ்.... பாகிஸ்தான்.... ஆட்கள் திருட்டுத்தனமாக இங்கே வந்தால் கண்டும் காணாமல் இருக்கும் திருட்டு மாடல் ஆட்கள் போல் அல்ல அவர்கள்..... அமெரிக்கா.... பிடித்து சுளுக்கு எடுத்து விடுவார்கள்.


S.Martin Manoj
பிப் 16, 2025 11:33

இவனுங்க ஏன் அங்க போனும் இங்கதான் நம்ம கேடி வருஷம் இரண்டு கோடி வேலைவாய்ப்பு கொடுக்குறாரு அப்புறம் ஏன் ஒண்ணுமே புரியலையே


Loganathan Kuttuva
பிப் 16, 2025 10:51

அனுமதியின்றி அங்கு இருப்பவர்கள் இந்திய தூதரகத்தில் சென்று உரிய கடிதத்தை பெற்றுக்கொண்டு இந்திய விமானத்தில் இங்கு வந்து சேரலாம் .ஆனால் அவர்கள் வேறு வெளி நாடுகளுக்கு செல்ல முடியாது .


Sudha
பிப் 16, 2025 09:36

செயின் போட்டார்களா, உங்களுக்கு தெரியாது


பாமரன்
பிப் 16, 2025 08:31

அழைத்து வரப்பட்டனர்... வருகை மாதிரி வார்த்தைகளை எப்படி கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் போடுறீங்களோ...??? எதிரி கட்சியின் முன்னாள் பிரதமர்களை பற்றி எழுதும் போது வராத மரியாதை இந்த ஓடுகாலிகளை இந்திய அம்பத்தாறு இஞ்ச் அங்கே இருக்கும் போதே பேக் பண்ணி குப்பை மாதிரி கொண்டாந்து இங்கே கொட்டியிருக்காங்க... இப்படி யாரோ யாரையோ எதுவோ செஞ்ச மாதிரி ஒரு பொறுப்பான (???) ஊடகம் செய்தித்தாள்கள் வெளியிடுவதும் இங்கே நேர்ந்து விடப்பட்ட அப்ரசண்டிக இப்போ சம்பந்தமில்லாமல் டீம்காவை இங்கே திட்டப் போவதும் ஒன்றுதான்... அதாவது பைத்தியக்காரத்தின் உச்சம்


Kasimani Baskaran
பிப் 16, 2025 10:27

பைத்தியங்களுக்குத்தான் யாரை பார்த்தாலும் பைத்தியமாக தெரியும். இதில் சில காலிஸ்தானிய தீவிரவாதிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. தீவிரவாதி இருக்கும் பொழுது எப்படி கெளரவமாக எல்லோரையும் கொண்டு வரமுடியாது. ஆகவே விலங்கிடுவது 100% சரிதான்.


Kumar Kumzi
பிப் 16, 2025 11:10

ஓசிகோட்டர் கொத்தடிமை கூமுட்ட திருட்டுத்தனமா போனா பூமாலையா போட்டு கூட்டிட்டு வருவா


S.Martin Manoj
பிப் 16, 2025 11:29

திருட்டு தனமா குடியேறியவர்களில் பாதி குசராத்து காரனுவ அப்படின்னா திருட்டுத்தனமாக அதிகமாகத்தான் இருக்கும்


V.Mohan
பிப் 16, 2025 18:04

யார் இந்த சார்? உங்களது தனிமனித கருத்து சுதந்திரத்தை மீறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதமரை ஏன் தொடர்ந்து தவறான வார்த்தைகளில் விமரிசிக்க வேண்டும். கிரிமினல்தனமா வேறு நாட்டுக்கு போனா இப்படி நடக்கும்னு தெரியாத கைப்புள்ளங்க பாரு அவங்க,, திமிரெடுத்து சொந்தங்களோட சொத்தை வித்து கேடிகளுக்கு பணம் கொடுத்து வேற நாட்டுக்கு போனா, அந்த நாட்டுக்காரன் இதுக்கு மேலயும் பண்ணுவான். ஏன் உங்க அமைதி மார்க்க காரங்க நாட்டுக்கு போலாமில்ல, ஹூம் போனா அவன் அடிச்சு காலை ஒடச்சு டாய்லட் கழுவ விட்டு பால்வனத்துல ஓட விடுவான் கல்லால அடிச்சு சாக வைப்பான். அவங்களோட ""மனிதநேயம்"" பற்றி ஒரு வரி எழுத நெஞ்சுத்துணிவு இருக்கா ??? விடியல் சம்பள விசுவாசிகள் என்ன என்ன சொல்றாங்களோ அதை ஒப்புக்கறவங்க -"" பகுத்தறிவு படைத்தவங்க,""" சீரிய தலைவர்கள்""அப்படித்தானே மகா மகா புத்திசாலிகள் ஐயா நீங்க


V.Mohan
பிப் 16, 2025 18:05

யார் இந்த சார்? உங்களது தனிமனித கருத்து சுதந்திரத்தை மீறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதமரை ஏன் தொடர்ந்து தவறான வார்த்தைகளில் விமரிசிக்க வேண்டும். கிரிமினல்தனமா வேறு நாட்டுக்கு போனா இப்படி நடக்கும்னு தெரியாத கைப்புள்ளங்க பாரு அவங்க,, திமிரெடுத்து சொந்தங்களோட சொத்தை வித்து கேடிகளுக்கு பணம் கொடுத்து வேற நாட்டுக்கு போனா, அந்த நாட்டுக்காரன் இதுக்கு மேலயும் பண்ணுவான். ஏன் உங்க அமைதி மார்க்க காரங்க நாட்டுக்கு போலாமில்ல, ஹூம் போனா அவன் அடிச்சு காலை ஒடச்சு டாய்லட் கழுவ விட்டு பால்வனத்துல ஓட விடுவான் கல்லால அடிச்சு சாக வைப்பான். அவங்களோட ""மனிதநேயம்"" பற்றி ஒரு வரி எழுத நெஞ்சுத்துணிவு இருக்கா ??? விடியல் சம்பள விசுவாசிகள் என்ன என்ன சொல்றாங்களோ அதை ஒப்புக்கறவங்க -"" பகுத்தறிவு படைத்தவங்க,""" சீரிய தலைவர்கள்""அப்படித்தானே மகா மகா புத்திசாலிகள் ஐயா நீங்க


S.Martin Manoj
பிப் 16, 2025 22:13

இந்தியாவில் சரியான வேலைவாய்ப்பு கொடுத்தால் ஏன் அவன் வெளிநாடுகளுக்கு திருட்டுத்தனமாக போறான்


கிஜன்
பிப் 16, 2025 07:53

பார்க்க ரொம்ப பாவமா இருக்கு ... அரசு இவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு அனைத்து வசதிகளும் செய்யவேண்டும் .... சுயதொழில் தொடங்க உதவி செய்யவேண்டும் ....


கிஜன்
பிப் 16, 2025 07:53

பார்க்க ரொம்ப பாவமா இருக்கு... அரசு இவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு அனைத்து வசதிகளும் செய்யவேண்டும் .... சுயதொழில் தொடங்க உதவி செய்யவேண்டும் ....


jayvee
பிப் 16, 2025 09:29

நீ கொடேன் .. வாய் இருந்தா என்னவவெனாலும் பேசுவ சைமன் மாதிரி ..


S.Martin Manoj
பிப் 16, 2025 11:31

இங்கே பிழைக்க ஒண்ணுமே இல்லனுதான் அவனுங்க அங்க போய் பிழைக்க போயிருக்காங்க


பேசும் தமிழன்
பிப் 16, 2025 12:23

அத்தனை பேருக்கும் அரசு பணி கொடுத்து விடலாமா... என்ன கோரிக்கை நம்ம இத்தாலி பப்பு பேசுவது போல் இருக்கிறது ??


சுரேஷ்சிங்
பிப் 16, 2025 06:57

ஆச்சரியம். நம்ம ஆளுங்க யாருமே இல்லை.


திகழ் ஓவியன்,Ajax, Ontario
பிப் 16, 2025 08:28

ஆமா ஆச்சரியமாக உள்ளது சுரேஷ் சிங். எல்லா சிங்கும் போறான். நீங்க ஏன் போகல? நமக்கு தான் தமிழ், ஆங்கிலம் தெரியாது போ. கும்மிடிப்பூண்டி கூட தாண்ட முடியாது. இன்னும் 100 ஆண்டுக்கு 21 ஆம் பக்கத்தை படிக்கணும் ...


Kumar Kumzi
பிப் 16, 2025 11:13

நம்ம ஆளுங்க லண்டன்ல இருக்காய்ங்க சீக்கிரம் அவனுங்களும் வருவாய்ங்க


சமீபத்திய செய்தி