உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா மீதான கூடுதல் வரிக்கு அமெரிக்க எம்.பி.,க்கள் எதிர்ப்பு

இந்தியா மீதான கூடுதல் வரிக்கு அமெரிக்க எம்.பி.,க்கள் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இந்தியாவை மட்டுமே குறி வைத்து கூடுதல் வரி விதிப்பது, இருநாட்டு உறவுகளை பாதிப்பது மட்டுமின்றி, அமெரிக்கர்களையும் காயப்படுத்தி வருவதாக அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினர் விமர்சித்துள்ளனர். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக, 25 சதவீதம் என, இந்தியா மீது, 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் உரசல் ஏற்பட்டுள்ளது. அதிபரின் முடிவுக்கு அந்த நாட்டின் பல பொருளாதார, வெளியுறவுத் துறை நிபுணர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க பார்லிமென்டின், வெளியுறவுக் கொள்கைக்கான குழுவின் கூட்டம் நடந்தது. இதில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் அதிபரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளத்தில் இது தொடர்பாக சில எம்.பி.,க்கள் பதிவிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா மீது இத்தகைய வரி விதிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், இந்தியா மீது மட்டும் கூடுதல் வரி விதித்து உள்ளது முறையல்ல. இது, 20 ஆண்டுகளுக்கு மேலாக இரு நாடுகளுக்கிடையே கட்டமைக்கப்பட்ட உறவுகளை நாசப்படுத்துகின்றன. மேலும் அமெரிக்கர்களை காயப்படுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rathna
ஆக 29, 2025 11:54

இவனது பழி வாங்கலுக்கு பயந்து, அங்கே பல MP கள் வாயை மூடி கொண்டு உள்ளனர். கமலா ஹாரிஸ்சின் - டெமோகிராடிக் எதிர் கட்சியும் இந்தியாவுக்கு எதிரானது. அது தான் பங்களாதேஷில் தீவிரவாத அரசாங்கத்தை கொண்டு வந்தவன். இந்திய வட கிழக்கு மாநிலங்களை பிரிக்க திட்டம் போட்டவர்கள். நமது பப்புகளை போல அரசியல் வாதிகள் வாய் திறந்தால் நமது இந்திய வம்சாவளியினர்க்கு பாதிப்பு ஏற்படும்.


Mario
ஆக 29, 2025 09:33

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..


vivek
ஆக 29, 2025 10:48

நீ எதை வேண்டுமானாலும் சாப்பிடு


Amsi Ramesh
ஆக 29, 2025 09:20

பாரத அன்னை வெல்லட்டும்


Ganapathy
ஆக 29, 2025 09:18

உண்மை. இனி அமெரிக்கா மீதும் அமெரிக்கர்கள் மீதும் இங்குள்ள சமான்யர்களுக்கே நம்பிக்கை வராது. தன்னை செட்டப் ஆளை விட்டு சுட வச்சு அனுதாப ஓட்டு வாங்கி அதிபரான ட்ரம்பை தூக்கி புடிச்சு மக்களின் பிரதமரை தினமும் கிண்டலாக பேசும் அறிவீலி காங்கிரஸ் கூட்டணிக்கு இனி அழிவுதான்.


Ramesh Sargam
ஆக 29, 2025 08:17

இந்தியாவின் வளர்ச்சி மோடியின் ஆட்சியில், மிகவும் உறுத்துகிறது டிரம்புக்கு. ஆகையால்தான் இப்படி வரிப்பயித்தியம் பிடித்து அலைகிறார்.


சமீபத்திய செய்தி