உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: வர்த்தகப் போருக்கு மத்தியில் சீனா புதிய எச்சரிக்கை

அமெரிக்கா தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: வர்த்தகப் போருக்கு மத்தியில் சீனா புதிய எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் சீனா தனது உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்'' என்று சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, கூடுதல் வரி விதிப்பையும் அமல்படுத்தினார். இந்தியாவுக்கு, 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், சீனாவுக்கு, 155 சதவீத வரி விதிக்கப் போவதாக டிரம்ப் கூறியிருந்தார். அந்த முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்திருந்தார். தற்போது இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''நான் சீனாவுடன் நட்புறவுடனேயே இருக்க விரும்புகிறேன். வரி விதிப்பில் சீனா எங்களிடம் கடுமையாக நடந்து கொண்டது. உலக நாடுகளை தன் பிடியில் வைத்திருக்க விரும்பும் சீனாவை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எனவே, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் வரும் நவ., 1-ம் தேதி முதல், 155 சதவீத வரி விதிக்கப்படும்'' என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் உக்கிரம் அடைந்து இருக்கிறது. கோல்கட்டாவில் சீனத் தூதர் வெய், ஒரு நிகழ்வில் பேசுகையில், அமெரிக்க-சீனா வரிவிதிப்புப் போர் குறித்து கேட்டபோது கூறியதாவது: அமெரிக்க-சீன வரிவிதிப்புப் போர் பிரச்னையில், சீனாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. நாங்கள் எந்த மோதலையும் விரும்பவில்லை. ஆனால் கடுமையான சூழலுக்கு தள்ளப்பட்டால், நாங்கள் நிச்சயமாக பதிலளிப்போம். நாங்கள் போராடுவோம், ஆனால் எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன. பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறோம். அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்து பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அவ்வாறு செய்யாவிட்டால், சீனா தனது உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இது தான் எங்கள் அணுகுமுறை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

KRISHNAN R
அக் 23, 2025 12:49

அமெரிக்க சீன நாடுகள் தான் உலகின் பிரச்சினைக்கு காரணமாக இருக்கும்


Jagan (Proud Sangi )
அக் 23, 2025 21:09

பொருளோ, சேவையோ - தயாரிப்பவர்களிடம் தான் போட்டி இருக்கும். இந்தியா மாதிரி எல்லாத்தையும் இறக்குமதி செய்து சரக்கு அடிச்சி சினிமா பார்க்கும் கூட்டத்தால் யாருக்கும் பிரச்னை இல்லை. நடிகனை பார்க்க 41 பேர் சாகும் கூட்டம் இது. அறிவார்ந்த மக்கள் இங்கு இல்லை


N. Ramachandran
அக் 23, 2025 12:26

தமிழக முதல் மந்திரி சுடாலின் எல்லாம் அமெரிக்கா சீனா பிரச்சனையில் தலையிடுவது அவர் கௌரவத்திற்கு இழுக்கு. அந்த வேலையை செய்ய தி மு க கனி அக்கா போதாதா ?????


cpv s
அக் 23, 2025 11:16

the world joint to gether impose the 200 % trarif on america first


Jagan (Proud Sangi )
அக் 23, 2025 21:14

முடிந்ததால் செய்து பார்க்கட்டுமே சீனா, வியட்நாம், இந்தியா முதல் எல்லாரும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளே. அவன் திருப்பி வரி போட்டால் , திருப்பூர் முதல் ஐடி வரை எல்லாமே அடிவாங்கும் இங்க. உலகிலேயே அமெரிக்காவை எதிர்க்க சீனாவால் மட்டுமே முடியும் .


Naga Subramanian
அக் 23, 2025 11:00

வெளி நாடுகளிலிருந்து, எவ்வளவோ இலட்சம் கோடிகளை, தனது வாத திறமையால் தமிழகத்திற்கு கொண்டுவந்தது போல, நமது தமிழக முதல்வர்தான் அமெரிக்க பிரச்சனையில் உடனே தலையிட்டு, டிரம்பை மண்டியிட வைக்க வேண்டும். நடக்குமா


Ramesh Sargam
அக் 23, 2025 09:38

ட்ரம்ப் ஒருவர் மட்டும் அவருடைய தவறை திருத்திக்கொண்டால் போதும்.


Jagan (Proud Sangi )
அக் 23, 2025 21:10

ட்ரம்ப் அவன் நாட்டை பார்த்துக்குறான் என்ன தவறு செய்தான் ???? இந்தியா ஒண்ணும் புனித புத்தர் இல்ல. உலகிலேயே அதிக அளவு இறக்குமதி விதிக்கும் நாடு இந்தியா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை