உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவுக்கான வரி உயர்வை 90 நாட்களுக்கு நிறுத்தி அமெரிக்க அதிபர் சலுகை

சீனாவுக்கான வரி உயர்வை 90 நாட்களுக்கு நிறுத்தி அமெரிக்க அதிபர் சலுகை

வாஷிங்டன்: சீ னாவுக்கு பரஸ்பர வரி கொள்கையின்படி, 145 சதவீதம் வரி அறிவித்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அதை மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கள் நாட்டுடன் வர்த்தக பற்றாக்குறை வைத்துள்ள நாடுகளுக்கு அதிக வரி விதிப்பதை, சில மாதங்களுக்கு முன் நடைமுறைப்படுத்தினார். இதில் சீனாவுக்கான வரி படிப்படியாக உயர்த்தப்பட்டு, 145 சதவீதம் ஆனது. பதிலுக்கு, அமெரிக்க பொருட்களுக்கு சீனா 125 சதவீத வரி விதித்தது. இதையடுத்து கடந்த மே மாதம், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இருதரப்பினரும் சந்தித்து பேசினர். அப்போது, பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பின் கடந்த ஜூலையில், நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. தற்போது சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் 30 சதவீத வரியும், அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் 10 சதவீத வரியும் அமலில் உள்ளன. இதே வரி நீடிக்குமா என நேற்று முன்தினம் அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர், 'சீனா நல்ல முறையில் பேச்சு நடத்தி வருகிறது. எனக்கும் சீன அதிபர் ஷீ ஜின்பிங்கிற்குமான உறவு சிறப்பான முறையில் உள்ளது' என்றார். இந்நிலையில், சீனாவுக்கான வரியை மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் உத்தரவில், அதிபர் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஆக 13, 2025 22:13

இந்தியா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர். சீனா செல்கிறார் இந்திய பிரதமர். இந்த செய்திகளை படித்துவிட்டு, ட்ரம்ப் ரொம்பவே பயந்து, அதாவது எங்கே சீனாவும்-இந்தியாவும் ஒற்றுமையாகி விடுவார்களோ என்கிற பயத்தில் சீனாவுக்கு சலுகை அறிவிக்கிறார் ட்ரம்ப்.


Nathan
ஆக 13, 2025 14:27

சீனர்கள் செருப்பால அடித்தாலும் இந்த கோமாளி அதிபர் சிரித்துக் கொண்டே நன்றி சொல்ல வேண்டும் ஏனெனில் அவரின் தகுதி அவ்வளவு தான்


S.V.Srinivasan
ஆக 13, 2025 09:13

டிரம்ப் அண்ணனுக்கு சீனா காரங்ககிட்ட மட்டும் இன்னும் பயம் இருக்கு. ஹி ஹி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை