உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வாஷிங்டன் போலீஸ் கட்டுப்பாட்டை கையில் எடுத்தார் அமெரிக்க அதிபர்

வாஷிங்டன் போலீஸ் கட்டுப்பாட்டை கையில் எடுத்தார் அமெரிக்க அதிபர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன் : அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் போலீஸ் துறை மாகாண அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், குற்றங்கள் அதிகரித்ததாக கூறி அத்துறையை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.அமெரிக்காவின் தலைநகராக செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட பகுதி வாஷிங்டன். இந்த நகரின் போலீஸ் துறை மேயர் முரியல் போவ்சர் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.கடந்த வாரம் அரசு முன்னாள் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டார். இதையடுத்து அதிபர் டிரம்ப் நகரில் குற்றச்சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும், தலைநகரின் போலீஸ் துறையை தன் கட்டுப்பாட்டின் கீழ் எடுக்க உள்ளதாகவும் கூறியிருந்தார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'வீடு இல்லாதவர்கள் நகரை விட்டு வெளியேறுங்கள். உங்களுக்கு தங்கும் இடம் வழங்கப்படும். ஆனால் நகரை விட்டு தொலைவில் இருக்கும். குற்றவாளிகள் வெளியேற வேண்டியதில்லை. உங்களை சிறையில் அடைக்க போகிறேன்' என்றார்.இந்நிலையில், அதிபர் டிரம்ப் குற்ற அவசர நிலையை அறிவித்து, போலீஸ் துறையை தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தார். இது குறித்து அவர் கையெழுத்திட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது:வாஷிங்டனில் குற்றங்கள் கட்டுப்பாட்டை மீறியுள்ளன. கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அரசு ஊழியர்கள், பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணியருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.இதனால் போலீஸ் துறையை என் அதிகாரத்தின் கீழ் பயன்படுத்த தீர்மானிக்கிறேன். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

visu
ஆக 13, 2025 07:11

சரியான செயலே நகர மேயர் எதிர்கட்சிக்காரர் ஒத்துழைப்பதில்லை அதனால் அதிகாரத்தை பரிகிறார் நம்ம ஊரிலும் எல்லா மாநிலங்களிலும் இதை செய்யலாம் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு சலூட் அடிப்பதிலேயே காவல்துறை பிஸி ஆ இருக்காங்க


Thravisham
ஆக 13, 2025 04:54

அண்ணாமலை போன்ற திறமையுள்ள போலீஸ் அதிகாரியை நியமித்திருக்கலாம்.


Mani . V
ஆக 13, 2025 03:31

குரங்கு கையில் பூமாலை.


xyzabc
ஆக 13, 2025 01:56

இது ஒரு திராவிட மாடல் ஆட்சியோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை