உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயார்; டிரம்ப்

ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயார்; டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயாராக உள்ளது என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யா - அமெரிக்கா இடையே மோதல் போக்கு உள்ளது.இந்த வார தொடக்கத்தில் டிரம்புக்கும், ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மெட்விதேவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு தொடங்கியது. இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் கடும் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் 2 நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா நோக்கி அனுப்பி வைக்க உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது: ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயாராக உள்ளது. அணு ஆயுத தாக்குதல் நடத்தும் 2 நீர்மூழ்கி கப்பல்களை அனுப்ப வேண்டி இருந்தது.நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது, அது பொருத்தமானது என்று நாங்கள் நினைக்கவில்லை. எனவே நாங்கள மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமது மக்களின் பாதுகாப்பிற்காக நான் இதைச் செய்கிறேன். நீங்கள் அணுசக்தி பற்றிப் பேசும் போது, நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Dv Nanru
ஆக 03, 2025 18:13

ட்ரம்ப் மாதிரி பைத்திக்காரன் இந்த உலகத்திலேயே யாரும் இல்ல ட்ரம்ப் மாதிரியே ரொனால்ட் ரீகன் கடாபியை மத்திய கிழக்கின் பைத்தியக்கார நாய் என்று ரீகன் அழைத்தார் எவ்வளவு திமிர்...இதுவரை அமெரிக்க ஜனாதிபதிபியாக இருந்ததில் மிக மிக நல்ல மனிதர் ஆப்ரகாம்லிங்கன் அவர் மட்டும் இல்லை என்றால் அமெரிக்கர்கள் அவர்களுடைய மீன்பிடி குல தொழில் செய்துகொண்டு இருப்பார்கள் அவரை தவிர மற்ற அனைத்து அமெரிக்க ஜனாதிபதியும் ரீகன் சொன்னது அவங்களுக்கு தான் மிக சரியாக பொருந்தும் பொருத்தமும் கூட ..ஏன் எல்லா அமெரிக்க ஜனாதிபதியும் தலை கணம் அதிகமாக இருக்கு இவ்வளத்துக்கும் சரியான பதிலடி கொடுத்தது நம்ம வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தான்.reference recent conference ....


சாமானியன்
ஆக 03, 2025 08:52

இவருக்கு ஸ்டாலின் மாதிரி தூக்கம் வரவில்லை. டெய்லி அறிக்கை விட்டுக்கொண்டே இருக்கிறார்.


சூரியா
ஆக 03, 2025 06:30

உலகம் முழுவதும் அணு ஆயுதப் பரவலைத் தடுக்க அமெரிக்கா நிர்பந்திக்குமாம்: ஆனால் தான் மட்டும் தன் விருபத்திற்கேற்ப அணு ஆயுதத்தைக் கையில் எடுக்குமாம். இது என்ன சட்டாம்பிள்ளைத்தனம்?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 02, 2025 22:57

பொறுப்பற்ற பேச்சு ......


Saai Sundharamurthy AVK
ஆக 02, 2025 22:54

திரைப்படங்களில் காட்சிகள் விறுவிறுப்பாக போக வேண்டும் என்றால் நடு நடுவே காமெடி நடிகர்களை வைத்து காட்சிகள் வைப்பார்கள். உலக நடப்புகளை நாம் கவனிக்கும் போது டிரம்ப் அவ்வப்போது நடு நடுவே வந்து காமெடி செய்கிறார். ஏற்கனவே அவர் , தன்னை யாரும் கணிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார். ஏதாவது சிலுமிஷம் செய்து கொண்டு தான் இருப்பார்.


RAKKUPANDIAN
ஆக 02, 2025 22:45

Whether he is a mad or acting such a way???


Perumal Pillai
ஆக 02, 2025 22:18

இவர் பெரிய கோமாளியாக இருப்பாரோ ?


ஆரூர் ரங்
ஆக 02, 2025 21:48

ஏற்கனவே அமெரிக்காவில் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. போர் அது இதுன்னு போனா மக்கள் தெருவுக்கு வந்து போராட்டம் நடத்துவார்கள. படித்த அமெரிக்க மக்களே உங்களுக்கு போயும் போயும் டிரம்பும் ஜோபைடனும்தான் கிடைத்தார்களா? வெளங்க வாய்பில்லை.


மூர்க்கன்
ஆக 08, 2025 17:07

இதையேதான் இங்கேயும் ?? இங்க மட்டும் என்ன வாழுதாம்?? வலதுசாரிகள் என்றாலே வெறியர்கள் சிந்திக்க மறந்தவர்கள் என்றுதான் அர்த்தம் .


நிக்கோல்தாம்சன்
ஆக 02, 2025 21:43

உமக்கும் ஒரு fake மார்ஷல் போஸ்ட் பார்சல்


Sudha
ஆக 02, 2025 21:17

சீக்கிரமா நோபல் பரிசு பார்சல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை