உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 21 நாளில் பதிலளிக்க அதானிக்கு அமெரிக்க பங்குச்சந்தை நோட்டீஸ்

21 நாளில் பதிலளிக்க அதானிக்கு அமெரிக்க பங்குச்சந்தை நோட்டீஸ்

புதுடில்லி: பங்குச் சந்தை விதிகளை மீறியதாக கூறப்படும் புகார்கள் தொடர்பாக, தங்களுடைய நிலைப்பாட்டை, 21 நாட்களில் தெரிவிக்கும்படி, தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்டோருக்கு, அமெரிக்க பங்குச் சந்தை கமிஷன் சார்பில் நீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தனக்கு சாதகமான ஒப்பந்தங்கள் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு, 2,200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக, தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது, அமெரிக்க நீதித் துறை, அந்த நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.இது தொடர்பான தகவல்களை மறைத்து முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக, எஸ்.இ.சி., எனப்படும் அமெரிக்க பங்குச் சந்தை கமிஷன் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளது.இவற்றின் அடிப்படையில், கவுதம் அதானி உள்ளிட்டோருக்கு எதிராக, அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. இந்நிலையில், அமெரிக்க பங்குச் சந்தை கமிஷன், அதானி உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்த நோட்டீஸ் குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள கவுதம் அதானியின் வீட்டிலும், அவருடைய உறவினரும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் செயல் இயக்குனருமான சாகர் அதானியின் வீட்டிலும், நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளது.நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றம் வாயிலாக அனுப்பப்பட்டுள்ள, நவ., 21ம் தேதியிட்ட அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக உங்களுடைய நிலைப்பாட்டை, இந்த நோட்டீஸ் பெற்ற 21 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும். அல்லது நீதிமன்ற விதிகளின்படி, எதிர்த்து மனு தாக்கல் செய்ய வேண்டும்.அவ்வாறு நீங்கள் பதில் அளிக்காவிட்டால், வழக்கின் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ள நேரிடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
நவ 24, 2024 14:19

வழக்கு விவரங்களைப் பார்த்தால் அடானி குடும்பத்தினரது இந்திய செல்போன், மெயில்களை அமெரிக்க அதிகாரிகள் உளவு பார்த்துள்ளது என அப்பட்டமாக ஒப்புக் கொண்டுள்ளது போலவே தெரிகிறது. அது உண்மையென்றால் அது நமது நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்..பெகாஸிஸ் உளவு மென்பொருளை கொள்முதல் செய்ததாக மத்திய அரசை எதிர்த்துக் கூச்சலிட்ட INDI கும்பல் எங்கே?.


sankar
நவ 24, 2024 10:40

உங்கள் சட்டம் எங்களை கட்டுப்படுத்தாது


N.Purushothaman
நவ 24, 2024 10:15

நீதிமன்றத்தில் சந்திப்பார்கள் ...


sankaranarayanan
நவ 24, 2024 08:48

அமெரிக்க பங்குச் சந்தை கமிஷன், அதானி உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதற்குள் இங்குள்ள ஊடகங்கள் அதாணிக்கு பிடி வாரண்டு அணுப்பியுள்ளது என்று தவறாக தாறுமாறாக விளம்பரப்படுத்தி அதானியின் கவுரவத்தை அழிக்க முயலுகிறது வியாபாரத்தில் தொழிலில் எல்லா முதலிட்டர்களும் செய்கின்ற செயல்கள்தான் இது. ஒன்றும் புதிது அல்ல அதே அமெரிக்க முதலிட்டார்கள் மற்ற நாடுத்களில் தங்களது தொழிலை ஆரம்பரிக்க எவ்வளவு பணம் கொடுத்து ஆரம்பிக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும் அவர்கள் செய்தால் அது தவறில்லை அடுத்தவர்கள் செய்தால் அது தவறு இதற்கு ஒன்றும் பிடிவாரணடு செய்யமுடியாது இவர் என்ன கொலைக்குற்றமா செய்துவிட்டார் அல்லது பணத்தை திருடிக்கொண்டு வந்துவிட்டாரா?ர் ஹிடன்பர்க்கிற்கு தகுந்த சன்மானம் இன்னும் இவர் கொடுக்கவில்லையா அதுதான் கரணம். தகுந்த பதில் கொடுத்து எல்லாம் சரிசெய்தாகிவிடும்


Kasimani Baskaran
நவ 24, 2024 08:19

அதானிக்கு வரும் சிக்கலை விட லஞ்சம் வாங்கிய மாநில முதல்வர்களும் கூட சிக்கல் வரலாம்.


Dharmavaan
நவ 24, 2024 07:22

ஆதாரம் இல்லாமல் வெறும் புகாரை வைத்துக்கொண்டு சட்டம் நடவடிக்கை எடுக்க முடியுமா அதவும் அந்நிய நாடு. வல்லுநர்கள் விளக்கம் வேண்டும்


J.V. Iyer
நவ 24, 2024 04:48

நம்ம ஊரில் உள்ள எல்லா பதினெட்டு பட்டி தலைவர்களும் ஒரு வாய்ப்பு. நீங்கள் ஜார்ஜ் சோர்ஸ், பாராக் ஹொசைன் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், ஜோ பைடன், மற்றும் கமலா ஹாரிஸ் இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரவு இடுகிறேன். உடனே நோட்டிஸ் அனுப்பவும்.


சமீபத்திய செய்தி