உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதி தஹாவூர் ராணாவின் கடைசி முயற்சியையும் சுக்குநூறாக்கியது அமெரிக்கா கோர்ட்!

பயங்கரவாதி தஹாவூர் ராணாவின் கடைசி முயற்சியையும் சுக்குநூறாக்கியது அமெரிக்கா கோர்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இந்தியாவுக்கு நாடு கடத்தலை நிறுத்த கோரி பயங்கரவாதி தஹாவூர் ராணா தாக்கல் செய்த அவசர மனுவை அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9qp05bii&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவன் லஷ்கர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தஹாவூர் ராணா. நம் அண்டை நாடான பாகிஸ்தானை பூர்வீகமாக உடைய இவன், தற்போது அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான்.இவனை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், கடந்த ஜனவரியில் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது, ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.இதையடுத்து, எந்த நேரத்திலும் அவன் நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தன் கடைசி வாய்ப்பாக, இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு உடனடியாக தடைவிதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தான். 'இந்தியாவில் தன்னை சித்ரவதை செய்வர் என்பதால், நாடு கடத்தக்கூடாது' என, மனுவில் அவன் கூறியிருந்தான்.தஹாவூர் ராணா, தன் கடைசி வாய்ப்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் தஹாவூர் ராணாவின் கடைசி முயற்சியையும் நீதிமன்றம் சுக்குநூறாக்கியது. விரைவில் தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவான் என்பது உறுதியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

MARUTHU PANDIAR
மார் 07, 2025 22:37

யாரது அங்கே நல்ல பிரியாணி மாஸ்டரை ரெடி பண்ணி வையுங்க . நம்ப அண்ணன் தியாக சிகாமணி வந்து எறங்கப் போறாரு. ஒரு பத்து பதினைந்து வருடமாவது வாய்க்கு ருசியா பிரியாணி செஞ்சு போடணும் . ............... இந்த கருமம் பிடிச்சவன் அமெரிக்காவிலேயே சிறையில் இருந்து தொலைய வேண்டியது தானே ? இங்க கொண்டு வந்தால் அவனால ஏகப் பட்ட பிரச்சினைகள் மொளைக்குமே ?


spr
மார் 07, 2025 18:56

நம் நாட்டு குற்றவியல் சட்டங்களைவிட பயங்கரவாதிகளுக்கு பிற நாடுகள் வழங்கும் தண்டனை முறையானது இஸ்லாமிய நாடுகளுடன் நட்புறவாக இருக்கும் இந்தியா, இந்த குற்றவாளியைத் தண்டிக்க முடியுமா என்று இது இந்தியாவுக்கு அமெரிக்கா முன்வைக்கும் சவால். ஒரு ஊழல் வழக்கிலேயே, தன் குற்றத்தை மாஜிஸ்திரேட் முன் ஒப்புக் கொண்ட ஒருவரையே நம்மால் தண்டிக்க முடியவில்லை. ராஜீவ் கொலையாளிக்கு உடந்தையாக இருந்தவர்களே தியாகிகளாக வெளி வந்து விட்டனர் இந்தியாவுக்கு இது தேவையா.


VSMani
மார் 07, 2025 15:09

2008 ல நடந்த பயங்கர செயலுக்கு 17 வருடங்கள் கழித்துதான் நம் நாட்டிற்கு அந்த பயம்கரவாதியை கொண்டுவர முடிகிறது. எவ்வளவு காலம்தாழ்த்தி நடக்கிறது. காலம்தாழ்த்தி கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். எத்தனை உயிர்களைக் கொன்று குவித்தான். நம் அப்பாவி மக்கள் பாவம். இவன் கண் முன்னே இவன் அதிகம் நேசிக்கும் இவன் பிள்ளைகளை கொன்றால் எவ்வளவு துடிப்பான் அதேபோல் தானே மற்றவர்களின் உயிரும். தீவிரவாதிகள் இதை நினைத்து பார்க்கவேண்டும். எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நினைக்கவேண்டும்.


கத்தரிக்காய் வியாபாரி
மார் 07, 2025 14:04

வந்தவுடன் சாப்பாடு போடாமல் கொன்று விடவும்


Sudha
மார் 07, 2025 12:34

எல்லாம் டிராமா போல் தெரிகிறது, இன்னும் 100 நாட்கள் பொறுத்திருப்போம்


Krish Sankaran
மார் 07, 2025 12:34

இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள்....


RAJ
மார் 07, 2025 11:49

Waiting...... உன்னை rawmillல அரைச்சு உன் ரத்தத்தை சாக்கடையோட கலந்து பாகிஸ்தானுக்கு பார்சல் அனுப்பப்படும்.. .. waiting..


V Venkatachalam
மார் 07, 2025 11:34

இது தான் சொல்லாம சொல்லி அடிக்கிறது.. எவன் என்னெல்லாம் தமிழன் னு சொல்றானோ அவனுங்க மூஞ்சியே தெரியாதபடி கரி மேல் கரியா பூசிட்டீங்களே.. அய்யகோ..


Sankare Eswar
மார் 07, 2025 11:33

சைத்தான் கே பட்சா பாட்சா


Ganapathy
மார் 07, 2025 11:12

இத்தனை வருடங்களாக இவனை நாடுகடத்த பலமுறை கேட்டும் இடதுசாரி சோரஸ் தோஸ்த் பைடன் அரசு இவனை அங்கு பாதுகாப்பாக வைத்திருந்தது. இன்று ட்ரம்ப் போன்ற இஸ்லாமிய தீவிரவாத ஒழிப்பாளர் ஜனாதிபதியாக ஆனவுடன் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. நன்றி ட்ரம்ப் அவர்களே. இவன் இங்கு ஷரியத் முறையில் சொறிநாய் சாவு சாவான்.


புதிய வீடியோ