உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிறுவன் செய்த படுபாதகம்; 4 பேர் சுட்டுக்கொலை; அமெரிக்காவில் துயரம்!

சிறுவன் செய்த படுபாதகம்; 4 பேர் சுட்டுக்கொலை; அமெரிக்காவில் துயரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாநில பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 14 வயது மாணவன் என விசாரணையில் அம்பலமாகியுள்ளது.அமெரிக்காவின் ஜார்ஜியாவின் பாரோ கவுண்டி மாகாணத்தில் அப்பலாஜி என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். காயமடைந்தவர்களில் சிலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 ஆசிரியர்கள் பலி

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில், 4 பேரின் உயிரை பறித்தவர், 14 வயது மாணவர் என்றும், கொல்லப்பட்ட நான்கு பேரில் இருவர் சக மாணவர்கள், இருவர் ஆசிரியர்கள் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. இப்போது நடந்துள்ள சம்பவத்தில் சிறுவனே கொலைகாரனாக மாறி இருப்பது பெரும் வேதனை அளிப்பதாக, அந்நாட்டு கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

கத்தரிக்காய் வியாபாரி
செப் 05, 2024 14:06

இதற்கு தான் நம் முன்னோர்கள் யாகம் வளர்த்து மனித எண்ணங்களை நல் எண்ணங்களாக வைத்து இருந்தார்கள்


ராமகிருஷ்ணன்
செப் 05, 2024 10:41

இப்படிபட்ட மோசமான கலாச்சாரம் உள்ள நாட்டில் மற்ற நாட்டு மக்கள் ஏன் குடியேற துடிக்கிறார்கள். சிந்தியுங்கள்


xyzabc
செப் 05, 2024 10:33

This is barbaric.


Nagarajan D
செப் 05, 2024 09:56

பாரதம் அமெரிக்காவின் இந்த துப்பாக்கி கலாச்சாரம் மிகவும் கவலை அளிக்கிறது என்று உலக நாட்டாமைக்கு ஒரு கண்டனம் தெரிவிக்கவேண்டும்... எந்த நாட்டில் என்ன நடந்தாலும் பஞ்சாயத்துக்கு வரும் அமெரிக்காவிற்கு உலக நாடுகள் கவலை அளிக்கிறது என்று அறிக்கை விட்டால் சரியாக இருக்கும்


P. VENKATESH RAJA
செப் 05, 2024 08:08

அமெரிக்காவின் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பதை இது மாறி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிரூபிக்கிறது


Sampath Kumar
செப் 05, 2024 08:02

கத்தி ஏடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு அது போல தான் துப்பாக்கியும் அமெரிக்காவின் துப்பாக்கி கலாசாரம் வாழ்க அந்த நாட்டை சீரழிக்க இது ஒன்றவே போதும்