உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் இந்தியர் கொடூர கொலை; விவேக் ராமசாமி காட்டம்

அமெரிக்காவில் இந்தியர் கொடூர கொலை; விவேக் ராமசாமி காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அரசியல் பிரமுகர் விவேக் ராமசாமி கண்டனம் தெரிவித்தார்.அமெரிக்காவின் டல்லாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் கோடரியால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். சந்திர மௌலி நகமல்லையா கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் டாலஸ்ஸில் உள்ள “டவுன்டவுன் சூட்ஸ்” என்ற ஹோட்டலில் மேலாளர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரை கொடூரமான முறையில் கொலை செய்தததுக்கு பல்வேறு அமெரிக்க பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.அந்த வகையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டல்லாஸில் ஒரு அப்பாவி ஹோட்டல் மேலாளர், அவரது மனைவி மற்றும் மகனுக்கு முன்பாக கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டார். இது மிகவும் கொடூரமானது. சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

யார் இந்த விவேக் ராமசாமி!

அமெரிக்காவின் சின்சினாட்டியில் தமிழகத்தை சேர்ந்த பெற்றோருக்கு மகனாக பிறந்த விவேக் ராமசாமி,39, ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட விவேக் ராமசாமி, பிறகு அதில் இருந்து பின்வாங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Padmasridharan
செப் 15, 2025 12:53

இந்தியர்களை கொலை செய்யத் தூண்டியதே, இந்தியர்களை சங்கிலியால் நாட்டுக்கு அனுப்பி வைத்ததுதான் சாமி.. கொலை நாடாக ஆகியிருக்கிறது தற்பொழுது. மாலத்தீவு இந்தியாவை தவறாக சமூகத்தில் சொன்னபொழுது பொங்கியெழுந்தவர்கள் இதற்க்கு ஏன் மூடிக் கொண்டிருக்கிறார்கள்.


Rathna Kumar
செப் 15, 2025 08:24

லத்தீன் அமெரிக்க மக்கள் மிகவும் நல்லவர்கள், நம் நண்பர்கள்.


Suresh
செப் 14, 2025 19:02

லத்தீன் அமெரிக்கர்கள் எனும் இனத்தினர் மிகவும் கொடூரமானவர்கள். உலகிலேயே பயங்கரமான நாடுகள் என்று பெயர் பெற்றவை இத்தகைய லத்தீன் அமெரிக்கர்கள் வசிக்கும் வெனிசூலா, பனாமா, மெக்சிகோ போன்ற நாடுகள் தான். இவர்களை புத்தி இல்லையா என்று கேட்டால் கூட மிகவும் அரக்கத்தனமாக, மூர்க்கத்தனமாக தாக்குவார்கள்


Ramesh Sargam
செப் 14, 2025 13:16

மற்ற நாடுகள் மீது அதிக வரி விதிப்பதிலேயே கவனம் செலுத்தும் ட்ரம்ப், இது போன்ற குற்றங்களை தடுக்கவும் சிறிது கவனம் செலுத்தவேண்டும்.


naadodi
செப் 14, 2025 18:35

நடக்கலைன்னு தெரியுமா? ICE என்ற துறை மூலம் illegal aliens எனப்படும் சட்டப்படி குடி புகா அயல் நாட்டினரை கூண்டோடு தூக்கும் வேலை நடந்து கொண்டுதான் உள்ளது.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 14, 2025 11:40

சட்டப்படி முறையாக அனுமதி பெற்று வேலை செய்த ஒருவர் - வேலை செய்யாத அல்லது பிரச்சனை உள்ள ஒரு வாஷிங் மெஷினை பயன்படுத்த வேண்டாம் என்று சொன்னதற்காக - உடன் வேலை செய்யும் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர் வெறி பிடித்து மனைவி மற்றும் மகன் கண் முன்னர் துரத்தி தலையை வெட்டி கொலை செய்வது மிகவும் கொடூரமானது. அப்படி வெறித்தனமாக கொலையாளி நடந்துகொள்ளும் அளவுக்கு என்ன விதமான வாக்குவாதம் அவர்களிடையே நடந்திருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இதில் இருவருக்கும் ஒருவர் பேசும்மொழி மற்றவருக்கு தெரியாது என்பது செய்தி. இவர்களிடையே மொழிபெயர்த்த அந்த மூன்றாம் நபருக்குத்தான் உண்மை தெரியும்.


sankaranarayanan
செப் 14, 2025 11:28

சரியான போராட்டம் இந்தியனுக்கு அங்கே ஆத்திரம் வருவது சகஜம்தான் இவர் எல்லோராலும் போற்றப்பட வேண்டியவர் ஆதரவு கொடுங்கள்


Mahadevan
செப் 14, 2025 10:27

உங்களுக்கு கைவந்த கலை


Azar Mufeen
செப் 14, 2025 10:19

குஜராத் மாடல்


Artist
செப் 14, 2025 10:28

மார்க்கம் அமைதியை போதிக்காதா


Yuvaraj Velumani
செப் 14, 2025 12:19

தீவிரவாதி ஆதரவு கொடுத்து ஊரை அளிக்கும் கும்பல்


பெரிய ராசு
செப் 14, 2025 14:28

பெயர் கேட்டவுடன் ஆளைப்பார்த்தவுடன் வெறுக்கப்படும் கேடுகெட்ட ஜந்துத்வம் அதன் மதமும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 14, 2025 09:48

உலகம் முழுவதும் தமிழகத்தின் சீரான திராவிட மாடல் பின்பற்ற படுகிறதோ?


Moorthy
செப் 14, 2025 09:21

யார் இந்த ?? இது என்ன சொல்லாடல் ?


Mahadevan
செப் 14, 2025 10:29

பலவருடங்கள் ஆயின


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை