உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் ஒருபோதும் ஜனநாயகத்தை கொண்டு வராது; நோபல் பரிசு வென்ற ஈரான் போராளி வேதனை

போர் ஒருபோதும் ஜனநாயகத்தை கொண்டு வராது; நோபல் பரிசு வென்ற ஈரான் போராளி வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்; போர் ஒருபோதும் ஜனநாயகத்தை கொண்டு வராது என்று நோபல் பரிசு பெற்றவரும், ஈரான் மனித உரிமை போராளியுமான நர்கீஸ் முகமதி தெரிவித்துள்ளார்.ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக அந்நாடு மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போர் இன்னமும் ஓயவில்லை. இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வரும் அதே நேரத்தில் அமெரிக்காவும் போரில் குதித்துள்ளது. உலக நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மனித உரிமை ஆர்வலர்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நோபல் பரிசு பெற்றவரும், ஈரானில் மகளிர் உரிமைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடி வரும் நர்கீஸ் முகமதி போரை கண்டித்துள்ளார். இவர் 2023ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர்.இஸ்ரேல், ஈரான் போர் குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது; நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். போர் ஒருபோதும் ஜனநாயகத்தை கொண்டு வராது. மனித உரிமைகள், சுதந்திரம் என எதையும் போர் தராது. அமெரிக்காவின் குண்டுகளினால் ஈரான் மக்களுக்கு விடுதலை கிடைக்காது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஜூன் 23, 2025 20:08

ஒருவேளை டிரம்புக்கு அந்த நோபல் அமைதி பரிசு கொடுத்திருந்தால் இரானிலும், இஸ்ரேலிலும் அவர் ஜனநாயகம் கொண்டு வந்திருப்பார்? தவறு செய்துவிட்டீர்களே, டிரம்புக்கு நோபல் அமைதி பரிசு கொடுக்காமல்.


ponssasi
ஜூன் 23, 2025 15:49

உலகில் எந்த முஸ்லீம் நாட்டிலும் ஜனநாயகம் இல்லை. ஈரானில் மட்டுமல்ல உலகில் உள்ள அணைத்து முஸ்லீம் பெண்கள் மற்றும் குழைந்தைகளுக்காகவும் நீங்கள் போராடித்தான் ஆகவேண்டும்


ருத்ரன்
ஜூன் 23, 2025 15:34

மகளிருக்கு எதிரான ஈரானின் சட்டங்களை எதிர்த்து போராடும் இந்த போராளி பெண்மணிக்கு அமைதிக்கான நோபல் பரிசு எதற்காக கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. பெண்களுக்கு உரிமை கிடையாது என்பது இஸ்லாமிய அடிப்படைவாத சட்டங்கள். அதற்கு எதிராக உங்கள் நாட்டு அதிபருடன் போராடுவது உங்கள் உரிமை. ஆனால் உங்கள் நாட்டின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹமாஸ், ஹௌதிகள், போகோ ஹராம் போன்ற தீவிரவாத இயக்கங்கள் தவிர மேலும் பல இயக்கங்கள் இரக்கமே இல்லாமல் அப்பாவி மக்கள், அதுவும் பெண்கள் குழந்தைகளை குண்டு வைத்து கொல்கிறார்களே. அது போரை விட கேவலமான செயல் இல்லையா. அப்போது எங்கே இருந்தீர்கள். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், இஸ்ரேலும் அமெரிக்காவும் உங்கள் நாட்டின் மீது போர் தொடுத்து உங்கள் அதிபரை கொன்று மீண்டும் 40 வருடங்களுக்கு முன் உங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கையை கொண்டு வருவது உங்களுக்கு தான் நல்லது.


Venkateswaran Rajaram
ஜூன் 23, 2025 15:29

முதலில் ஈரான் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து அவர்களை பயங்கரவாத செயலில் ஈடுபடுத்துவதை நிறுத்த வேண்டும்


நிவேதா
ஜூன் 23, 2025 16:59

நீங்கள் ஒரு சார்பாக எழுதி இருக்கிறீர்கள். அமெரிக்காவும் ஒரு சில பயங்கரவாத அமைப்புகளை மறைமுகமாக ஆதிரிக்கிறது. இந்தியா பாகிஸ்தானில் பல பயங்கரவாத அமைப்பு தலைவர்கள் பதுங்கி உள்ளனர் என ஆதாரத்தோடு இந்தியா சொன்னாலும் அமெரிக்கா அவர்களை ஒழிக்க ஓடிவர வில்லை. ஏனெனில் அவர்களை வைத்து இந்தியா உட்பட எல்லா ஆசிய நாடுகளுக்கும் தலைவலியை உண்டாக்கலாம் என்ற நல்ல எண்ணமே. தாலிபான்கள் எப்படி, எதற்க்காக இவ்வளவு இவ்வளவு பெரிய பயங்கரவாத சக்தியாக மாறினார்கள் என்ற வரலாறை படித்து பாருங்கள். ஒசாமா பின் லாடன் தன்னை வளர்த்த அமெரிக்காவையே தாக்கிய பின் தான் எதிரியானவன். தாலிபான்களை ஒழிப்பதாக ஆப்கான் மீது போர் தொடுத்து அந்த நாட்டையே சூறையாடி விட்டு போரில் வெற்றி பெற்றோம் என சொல்லி அந்த நாட்டை திரும்ப தாலிபான்களிடமே ஒப்படைத்தது அமெரிக்கா. ஈராக்கின் வளத்தை சூறையாடி விட்டு, சதாம் உசைனை கொன்று விட்டு கடைசியில் வெளியே வந்தது அமெரிக்கா. பயங்கரவாதத்தை ஈரான் மட்டுமே வளர்ப்பதாக கட்பனையில் இருக்காதீர்கள். தன் ஆயுதங்களை விற்க தன் எதிரிநாடுகளுக்கு தொல்லை கொடுக்க எல்லா வளர்ந்த நாடுகளும் இதை செய்கின்றன. பயங்கரவாதம் செய்வதில் பெரும்பாலோர் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு முதலீடு ஆயுதங்கள் எல்லா திசைகளிலும் இருந்து வருகின்றன


ருத்ரன்
ஜூன் 23, 2025 20:40

தீவிரவாதம் பெரும்பாலும் ஒரு மதத்தை சார்ந்து இருக்கிறது என்று ஒப்புக்கொண்டீர்கள். சரி. உலகின் இரு பெரிசுகள் பணத்தை காட்டியோ அல்லது வேறு வழிகளிலோ தீவிரவாத அரசியல் செய்ய அழைத்தார்கள் என்றால் மத்திய கிழக்காசிய நாடுகளுக்கு எங்கே போச்சு புத்தி. லேடனை ரஷியாவுக்கு எதிராக வளர்த்தது அமெரிக்க தான் ஒப்புக்கொள்கிறேன். அது போன்று பல இயக்கங்கள் ஏன் ஒரு மதத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்க போடும் எலும்பு துண்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஏன் போகவில்லை. காரணம் ஒன்று தான். அந்த மதத்தில் தான் அடிப்படை வாதம் இன்னும் செயலில் உள்ளது. பல அரசாங்கங்கள் அதன் அடிப்படையில் செயல் படுகின்றன. மனித உயிர்களை துச்சமாக கருதி பொது இடங்களில் ஆடு மாடுகள் வெட்டப்படுவது போல தண்டனை தருகிறார்கள். உலகில் வேறு எந்த நாடுகளில் இது போன்று காட்டுமிராண்டித்தனம் நடக்கிறது. அமெரிக்க குள்ள நரி அதன் குணத்தை காட்டும். அதனால் அவர்களால் வளர்ந்தவர்கள் என்பதால் குண்டு வீசி போது மக்களை கொல்லலாமா. இவர்கள் கையில் அணு குண்டு வேறு கிடையாது விட்டால், சற்றும் யோசிக்காமல் யாரை வேண்டுமானாலும் கொன்று விடுவார்கள். எனவே தீவிரவாதிகளை உருவாக்கியவனுக்கு அவர்களை அழிப்பதில் முழு உரிமை உண்டு.


சமீபத்திய செய்தி