மேலும் செய்திகள்
கருணை கொலை சட்டம் ஸ்லோவேனியாவில் பொது வாக்கெடுப்பு
2 hour(s) ago
பாரிஸ்: நம் நாட்டுக்கு சொந்தமான, 'ரபேல்' போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதை பிரான்ஸ் கடற்படை அதிகாரி உறுதி செய்ததாக பாகிஸ்தான் டி.வி., செய்தி வெளியிட்டது. இதற்கு பிரான்ஸ் கடற்படை வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நம் ராணுவம், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை மேற்கொண்டது. இதில், பாகிஸ்தானில் உள்ள முக்கியமான பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. 'ஆப்பரேஷன் சிந்துார்' பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பாக்., ராணுவத்துக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. இறுதியில் பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சி கேட்டுக் கொண்டதால், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை நம் நாடு தற்காலிகமாக நிறுத்தியது. இந்நிலையில், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின்போது நம் நாட்டுக்கு சொந்தமான, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தயாரிப்பான ரபேல் போர் விமானத்தை பாக்., ராணுவம் சுட்டு வீழத்தியதாக அந்நாட்டின் செய்தி சேனலான 'ஜியோ டிவி' செய்தி வெளியிட்டது. மேலும், பிரான்ஸ் நாட்டின் கடற்படை தளபதி ஜாக் லானே என்பவர் அதை உறுதி செய்துள்ளார் எனவும், அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த பிரான்ஸ் அரசு பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்ட செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என கூறியுள்ளது. 'பாகிஸ்தான் செய்தி சேனல் குறிப்பிட்ட கடற்படை தளபதியின் பெயர் ஜாக் லானே இல்லை; அவரது பெயர் கேப்டன் இவான் லானே. தவறான தகவல் 'ரபேல் விமானங்களுக்கு கட்டளையிடும் பணியை மட்டுமே அவர் செய்து வருகிறார். இந்தியா - பாக்., மோதலில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. பாகிஸ்தான் செய்தி சேனல் வெளியிட்ட செய்தி பொய்யானது. தவறான தகவலை அளிக்கும் அந்த செய்தி சேனலை கண்டிக்கிறோம்' என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
2 hour(s) ago