மேலும் செய்திகள்
மியான்மரில் சிக்கி தவித்த 370 இந்தியர்கள் மீட்பு
10 hour(s) ago | 3
வாஷிங்டன்: ரஷ்யா உடன் பேச்சு நடத்துவதற்கான அமெரிக்க திட்டத்தை உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கிக்கு அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர, ஒரு விரிவான, 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: சமாதானத்தைப் பெறுவதற்கான ஒரு வழி எங்களிடம் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். ரஷ்யா உடன் பேச்சுவார்த்தைக்கான அமெரிக்க திட்டத்தை உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும். அவர்கள் நியாயமான முறையில் நெருங்கி வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு டிரம்ப் கூறினார்.ஜெலன்ஸ்கி சொல்வது என்ன?
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, தனது அலுவலகத்திற்கு வெளியே ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியதாவது: இப்போது நமது வரலாற்றின் மிகவும் கடினமான தருணங்களில் ஒன்றாகும். உக்ரைன் மிகவும் கடினமான சூழலை எதிர்கொள்ளக்கூடும். கண்ணியத்தை இழப்பது அல்லது ஒரு முக்கிய கூட்டாளியை இழக்கும் அபாயம்.உக்ரைனின் முக்கிய நலன்களைப் பாதுகாப்பேன். நான் 24 மணி நேரமும் போராடுவேன். இவ்வாறு ஜெலன்ஸ்கி பேசினார்.
10 hour(s) ago | 3