உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நாங்கள் அமைதியை விரும்புகிறோம்; டிரம்ப் சொன்னதை உறுதி செய்தார் ஜெலன்ஸ்கி!

நாங்கள் அமைதியை விரும்புகிறோம்; டிரம்ப் சொன்னதை உறுதி செய்தார் ஜெலன்ஸ்கி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: 'நாங்கள் அமைதியை விரும்புகிறோம். உக்ரைனுக்கு உதவும் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டது. ரஷ்யாவும் அதற்கு ஒப்புக்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. 30 நாள் இடைக்கால போர் நிறுத்தத்தை ஏற்க உக்ரைன் தயாராக இருக்கிறது என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார். இதற்கிடையே, உக்ரைனுக்கான ராணுவ உதவி நிறுத்தப்பட்ட உத்தரவை அதிபர் டிரம்ப் வாபஸ் பெற்றார். இதற்கு 30 நாள் இடைக்கால போர் நிறுத்தத்தை ஏற்க உக்ரைன் தயாராக இருப்பதே காரணம் என பேசப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் ஜெலன்ஸ்கி கூறியதாவது: அமெரிக்க தரப்பு எங்கள் வாதங்களை புரிந்து கொண்டது. எங்கள் கோரிக்கைகளை ஏற்று கொண்டது. எங்கள் குழுவினர், அமெரிக்கா குழுவிடம் போர் நிறுத்தம் தொடர்பாக சவுதி அரேபியாவில் ஆலோசனை நடத்தியது. இந்த ஆக்கப்பூர்வமான விவாதத்திற்காக அதிபர் டொனால்டு டிரம்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.ரஷ்யா ஒப்புக்கொண்டால் இந்த தருணத்தில் இருந்தே அமைதி ஏற்படும். இன்றைய விவாதங்களில், முக்கியமாக உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவி மற்றும் ராணுவ உதவிகள் நிறுத்தத்தை வாபஸ் பெற அமெரிக்கா ஒத்துக்கொண்டது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். உக்ரைனுக்கு உதவும் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். போர் நிறுத்தத்திற்கு தயாராக இருக்கிறதா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். இதற்கு சரியான நேரம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
மார் 12, 2025 19:46

பல லட்சம் உயிர்கள் போரில் மாண்டபிறகு நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்று கூறுவது சரியல்ல. அமைதியை விரும்புபவர்கள் என் போர் செய்யவேண்டும். அமைதியாக பேச்சுவார்த்தையின் மூலம் உங்கள் பிரச்சினைக்கு முடிவுகண்டிருக்கலாமே ...


பேசும் தமிழன்
மார் 12, 2025 14:53

அட கோமாளி... இதை தானே உலக நாடுகள் அனைத்தும் சொல்கின்றனர்..... நீ வீண் பிடிவாதம் பிடித்து... சொந்த நாட்டு மக்களையே அழித்து கொண்டு இருக்கிறாய்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை