உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்க; வங்கதேச அரசு வலியுறுத்தல்

ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்க; வங்கதேச அரசு வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: 'ஷேக் ஹசீனாவை இந்தியா நாடு கடத்த வேண்டும்' என வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் வலியுறுத்தி உள்ளார்.வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தனது ஆட்சியின் 100 நாட்களை நிறைவு செய்ததை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து அரசு விசாரணை நடத்தி வருகிறது. மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது ஒவ்வொரு கொலையிலும் நாம் நீதியை உறுதி செய்ய வேண்டும். போராட்டத்தின் போது, 1,500 பேர் கொல்லப்பட்டனர். 19,931 பேர் காயமுற்றனர். ஒவ்வொரு மரணம் பற்றிய தகவலையும் சேகரிப்பதில் எங்கள் அரசு மிகவும் கவனமாக இருக்கிறது.

பாதுகாப்பு

பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, இந்தியாவுக்கு தப்பி சென்ற, பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா நாடு கடத்த வேண்டும். சிறுபான்மையினர் உட்பட அனைத்து சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தனது அரசு தொடர்ந்து செய்து வருகிறது. ஹிந்து சமூகத்தினர் மட்டுமின்றி நாட்டின் எந்த குடிமகனும் வன்முறைக்கு ஆளாகாமல் இருக்க, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

R.MURALIKRISHNAN
நவ 18, 2024 13:02

ஓடியவரை நாடு கடத்தும்படி அடுத்ததாக ஓடப்போறவர் வலியுத்தல்


Anand
நவ 18, 2024 12:06

கவலை வேண்டாம், விரைவில் நீ நாடுகடத்தப்படுவாய்...


ஆரூர் ரங்
நவ 18, 2024 10:13

முதலில் உங்க நாடு பாரதத்திற்கு ஏற்றுமதி செய்த ஒரு கோடி கள்ளக்குடியேறி ஆட்களை அனுப்புகிறோம். சமீபத்தில் வந்தவர்களை அப்புறம் பார்த்துக்கலாம்.


Kundalakesi
நவ 18, 2024 10:12

இந்தியர்கள் ஆகிய நாம் துணி வாங்கும் போது இது பங்களாதேஷ் துணி என்றால் வேண்டாம் என்று 4 தடவை கூறினாலே கடை உரிமையாளர் அதை வாங்க மாதரம்


Barakat Ali
நவ 18, 2024 10:48

ஆம்.. அங்கே பருத்தியாடை தயாரிப்பு, ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகம்.. அங்கே உயர்பதவிகளில் இந்தியர்களே உள்ளனர்.. அதிலும் ஹிந்துக்கள் அதிகம்... நீங்கள் பருத்தியாடைகளை புறக்கணித்தால் அந்த ஹிந்துக்கள் எப்படி சம்பளம் பெறுவார்கள்? முதலில் இந்தியாவில் ஹிந்துக்களிடம் ஆசைகாட்டி வாக்குகளைப் பெற்று மோசம் செய்யும் பாஜகவிடம் மட்டும் எச்சரிக்கையாக இருங்கள் ......


GMM
நவ 18, 2024 10:10

இடை கால வங்கதேச சர்வாதிகாரிக்கு நாடு கடத்தல் போன்ற சர்வதேச விவகாரங்களில் எந்த அதிகாரமும் இல்லை. முதலில் இந்தியாவில் உள்ள வங்கதேச முஸ்லிம்கள் அழைக்க பட வேண்டும். வங்கதேசம் முன்னாள் இந்திய பகுதி . வாக்குரிமை நீங்கலாக , இந்திய அரசியல் சாசனம் கீழ் வரவேண்டும்.


Anonymous
நவ 18, 2024 10:38

ஐயா சாமி, வேண்டாம், வங்கதேச நம்ம கூட சேர்ந்தா, வெளியில போன ஓணானை நம்ம மடியில கட்டுநகதை ஆயிடும், அவ்வளவு பெரிய முஸ்லிம் மக்கள் தொகையை நாடு தாங்காது, ஏற்கனவே கள்ள தனமா எல்லை தாண்டி வந்திருக்கும் பங்களாதேஷ் முஸ்லிம் மக்களுக்கு சட்டவிரோதமாக குடியுரிமை, ஓட்டு உரிமை எல்லாம் குடுத்து, ஓட்டு வங்கிக்காக வெஸ்ட் பெங்கால் முதல்வர் மமதா பானர்ஜி ஆடுறதே நாடு தாங்க முடியாம திண்டாடுரோம், போதும் சாமி, நம்ம நாட்டு கூட அவங்கள மறுபடி இணைக்கணும்னு எந்த காலத்திலும் கோஷம் போட்டுறாதீங்க , நம்ம வருங்கால சந்ததிங்க நிம்மதியா இருக்குற வழியை யோசிப்போம்.


Venkateswaran Rajaram
நவ 18, 2024 10:01

இவர்களிடம் ஒப்படைத்தால் உடனே இவர்கள் சாமி பெயரை உச்சரித்து ஜோலி முடித்துவிடுவார்கள்


N Sasikumar Yadhav
நவ 18, 2024 09:46

முதலில் தேர்தல் நடத்துங்கள் . ஜனநாயக முறைப்படி வரும் பிரதமர் ஏதாவது சொல்லட்டும் . நீங்க சொல்ல கூடாது .


Naga Subramanian
நவ 18, 2024 09:06

இந்த இறக்குமதி செய்யப்பட்ட பிரதமர் யூனுஸை முதலில் நாடு கடத்த வேண்டும்.


Barakat Ali
நவ 18, 2024 08:54

பின் லாதின் வேணுமுன்னு அமெரிக்கா பாகிஸ்தானை இப்படியா கேட்டுச்சு ????


N Sasikumar Yadhav
நவ 18, 2024 09:50

சோத்துக்கு பிச்சையெடுக்கும் பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளால் முடியாது. ஆனால் பாரதத்தில் வசிக்கும் பாகிஸ்தான் பங்களாதேசத்தின் அல்லக்கைகளை வைத்து ஏதாவது செய்யலாம்


MUTHU
நவ 18, 2024 10:07

பின் லாடன் நல்லவனா கெட்டவனா நீ என்ன சொல்லவர்ரே?.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 18, 2024 11:05

மத அடிப்படைவாதி பின் லேடனும், ஜனநாயக ரீதியாக பிரதமரான ஷேக் ஹசீனா அம்மையாரும் ஒண்ணா ??


RAJ
நவ 18, 2024 07:58

டிரம்ப் வந்தவுடனே.. பங்களாதேஷ் இந்துக்களை தினமும் கொடுமைப்படுத்தற.. கண்டிப்பா உன் முதுகெலும்பு உடைக்கப்படும்.. இங்க இருக்கிற அல்லக்கைங்க எல்லாம் அலெர்ட்டா இருங்க.. ..


சமீபத்திய செய்தி