உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு கனடா பிரதமர் சொன்னது என்ன?

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு கனடா பிரதமர் சொன்னது என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரோம் : ‛‛ முக்கிய விவகாரங்களில் இந்தியா உடன் இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளோம்'', என, பிரதமர் மோடி உடனான சந்திப்பிற்கு பிறகு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது குற்றம்சாட்டினார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவையும் சந்தித்து பேசியிருந்தார்.இந்த சந்திப்பு தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: பல்வேறு முக்கிய விவகாரங்களில் இந்தியாவும், கனடாவும் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்கும். அதேவேளையில், அவை என்னென்ன விவகாரங்கள் என்பதை தற்போது கூற மாட்டேன். ஆனால், அது வரும் காலங்களில் மிக முக்கியமான பிரச்னைகளை கையாள்வதில், இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிமொழி ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Easwar Kamal
ஜூன் 18, 2024 00:35

ஜஸ்டின் ட்ருடோ காணடவில் உள்ள சீக்கியர்கள் ஓட்டுக்கள் ரொம்ப முக்கியம். அந்த சீக்கிய கூட்டத்தை குளிர்விக்க எந்த எல்லையுக்கும் செல்வர். ஜஸ்டின் பதவியில் உள்ள வரை இப்படிதான் நட்பு irukum.


J.V. Iyer
ஜூன் 16, 2024 17:08

ஜஸ்டின் ட்ருடோ பதவி இறங்கும்வரை கனடாவுக்கு விமோசனம் கிடையாது.


Jai
ஜூன் 16, 2024 14:36

ஒரு நாட்டின் வளர்ச்சி உடனடியாக நடந்துவிடாது. முதலில் சில மக்கள் கடின உழைப்பையும் புத்திசாலிதானத்தையும் திறமையும் பயன்படுத்தி முன்னேறுவார்கள். பிறகு அவர்களை தொடர்ந்து மற்றவர்கள் முன்னேறி வருவார்கள். ஆனால் கடினமாக உழைத்து முன்னேறிய சீக்கியர்களை கனடா கவர்ந்து கொண்டு மேலும் பல திறமையான சீக்கியர்களை எடுத்துக் கொள்ள இங்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். போதைப் பொருள்களை பரவவிட்டும் பிரிவினை வாதத்தை தூண்டி விட்டும் மேலும் பல திறமையான சீக்கியர்களை இங்கிருந்து கவர்ந்து கொள்ள பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு எதிராக மாநிலக் கட்சிகள் எதுவும் செய்வதில்லை. இங்குதான் நாட்டுப்பற்றுள்ள வலதுசாரிக் கட்சிகள் தேவை அவசியம் வருகிறது. தொடர்ந்து இடதுசாரி கட்சிகள் ஆட்சி நடந்தால் இது போன்ற பிரிவினைவாதத்தை தூண்டுவது எளிதாக இருக்கும். தமிழ்நாட்டிலும் அப்படித்தான் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் திமுக பிரிவினைவாத பேச்சு பேசுவார்கள்.


Ramesh Sargam
ஜூன் 16, 2024 12:20

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்குள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகளால் மிகவும் மிரட்டப்பட்டு, அவர்கள் பிடியில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் தவிக்கிறார். இந்தியாவிடம் பூரண நம்பிக்கை வைத்து உதவி கோரினால் அவர் அவர்களிடமிருந்து தப்பிக்க இந்தியா வழி வகுக்கும்.


Senthoora
ஜூன் 16, 2024 17:50

சிரிப்பு வருது, அவங்களுக்கு அமேரிக்கா இருக்கு பக்கத்தில், இன்னும் எழுதலாம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை