உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காங்., கட்சியினர் தாக்கியதாக புகார் அமெரிக்காவில் இந்திய செய்தியாளருக்கு என்ன நடந்தது ?

காங்., கட்சியினர் தாக்கியதாக புகார் அமெரிக்காவில் இந்திய செய்தியாளருக்கு என்ன நடந்தது ?

டெக்சாஸ்: அமெரிக்காவில் காங். அயலக அணி பொறுப்பாளர் சாம்பிட்ரோடாவிடம் இந்தியா டுடே அமெரிக்க செய்தியாளர் ரோஹித் சர்மா பேட்டி எடுத்த போது காங். கட்சியினரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.லோக்சபா எதிர்க்கட்சிதலைவரும், காங்.,எம்.பி.யுமான ராகுல், அமெரிக்கா சென்றார்.பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அங்கு ஜாதி, மதம், இடஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்த இவரது பேச்சு, விமர்சனத்தையும் சர்ச்சையும் ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் ராகுல் அமெரிக்கா சென்றடைவதற்கு முன்பாக அங்கு டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் இந்தியா டுடே செய்தி சேனலின் ரோஹித் சர்மா என்ற செய்தியாளர் , காங்கிரஸ் அயலக அணி பொறுப்பாளர் சாம்பிட்ரோடாவை சந்தித்து பேட்டி கண்டார். அப்போது வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்தும் இந்துக்கள் கொல்லப்பட்டது குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.இதற்கு சாம்பிட்ரோடா பதில் அளிக்கும் முன்பே அங்கிருந்த காங். கட்சியினர் சிலர் ரோஹித் சர்மாவை மேலும் கேள்வி கேட்கவிடாமல் தகராறு செய்து, அத்துமீறினர். அவரிடம் இருந்த மொபைல் போனை பறித்து, அதில் பதிவான வீடியோ காட்சிகளை அழித்தனர்.இது தொடர்பாக ரோஹித் சர்மா அழுது கொண்டே வீடியோவை வெளியிட்டார். அதில் கடந்த 7-ம் தேதியன்று டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் சாம்பிட்ரோடாவை சந்தித்து பேட்டி எடுத்தேன். அப்போது அவருடன் 20 முதல் 30 பேர் வரை இருந்தனர். திடீரென என்னை தாக்கியதுடன் எனது மொபைல் போனை பறித்து அதில் இருந்த தகவல்களை அழித்து மிரட்டினர் என்றார். இந்த விவகாரம் குறித்து பிரதமர், மோடி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அரசியல் சாசனத்தை மதிப்பாக கூறி கொண்டிருக்கும் காங்.கட்சியினர் அரசியலமைப்பின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகையாளரான நம் இந்திய மைந்தனுக்கு அவமதிப்பை ஏற்படுத்திவிட்டனர் என மோடி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

p.s.mahadevan
செப் 15, 2024 11:39

இந்த செயலை எந்த செய்தி ஊடகமும் கண்டித்த தாக தெரியவில்லையே


பேசும் தமிழன்
செப் 15, 2024 11:16

பப்பு....இது தான் உங்கள் கட்சி ஆட்கள் ஜனநாயகத்தை காக்கும் லட்சணமா ??? செய்வது.... பேசுவது எல்லாம் தேச விரோத செயல்கள் தான்..... பதவி வெறி இவர்களது கண்ணை மறைக்கிறது.


M Ramachandran
செப் 15, 2024 09:47

காங்கரஸ் காரன்ங்களுக்கு கண்டனம் மென்பதெல்லாம் எருமைய்ய மாட்டின் மேல் பெய்த மழைக்கு ஒப்பாகும்.


Rpalnivelu
செப் 15, 2024 09:46

//சாம்பிட்ரோடாவை சந்தித்து பேட்டி எடுத்தேன். அப்போது அவருடன் 20 முதல் 30 பேர் வரை இருந்தனர்// அங்கே கூடவா ராவூவின் எடுபிடிகள் பிட்சை காசுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்?


Sudha
செப் 15, 2024 09:10

மோடி பொய் சொன்னாராம் சீக்கிரம் கூவு


GMM
செப் 15, 2024 08:49

செய்தியாளரை தாக்குவதில் இரு வல்லவர்கள் காங்கிரஸ் மற்றும் திமுக . புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் கடும் தண்டனை வழங்க வேண்டும்.


rama adhavan
செப் 15, 2024 07:00

போட்டோவையும், தகவல்களையும் அழிந்து போனாலும், அழிக்கப்பட்டாலும் மென்பொருள் மூலம் மீட்டு எடுக்கலாமே? எதற்கு அழுகை?


HoneyBee
செப் 15, 2024 09:30

அப்போ அடி மட்டும் வாங்கலாமா. என்னே உன் சமாதானம்


s sambath kumar
செப் 17, 2024 15:51

உன்ன அடிச்சா சிரிப்பியா? வலிச்சா அழத்தானே தோணும்?


Kasimani Baskaran
செப் 15, 2024 06:43

வெளிநாட்டில் இந்தியாவின் விரோதிகளுடன் உறவாடும் இதுகளை இந்தியாவுக்குள் விடுவதே மிகப்பெரிய குற்றம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை