உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காததற்கு காரணம் என்ன? விவரித்த மலேசியா பிரதமர்!

ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காததற்கு காரணம் என்ன? விவரித்த மலேசியா பிரதமர்!

புதுடில்லி: தீபாவளி கொண்டாட்டங்கள் காரணமாக, பிரதமர் மோடி 47வது ஆசியான் உச்சி மாநாட்டில் காணொலி காட்சியில் கலந்து கொள்வார் என்பதை மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வரும் அக் 26ம் தேதி முதல் அக் 28ம் தேதி வரை ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகள் நடைபெற உள்ளன. ஆசியான் உச்சிமாநாடு தொடர்பாக பிரதமர் மோடி மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இது தொடர்பாக, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியதாவது: கோலாலம்பூரில் 47வது ஆசியான் உச்சி மாநாட்டின் ஏற்பாடு குறித்து பிரதமர் மோடி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்று வருவதால், காணொலி வாயிலாக கலந்து கொள்வதாக அவர் எனக்குத் தெரிவித்தார்.அவரது முடிவை நான் மதிக்கிறேன், அவருக்கும் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மலேசியா-இந்தியா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து விவாதித்தோம். தொழில்நுட்பம், கல்வி மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகிய துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்புடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் இந்தியா மலேசியாவிற்கு ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது. மலேசியா-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதற்கும், ஆசியான்-இந்தியா ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் மலேசியா தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

KOVAIKARAN
அக் 23, 2025 19:17

முக்கியமான காரணம், டிரம்ப் அவர்களை நேரில் சந்திக்க விரும்பாதது. மற்றொரு காரணம் பீஹார் மாநில தேர்தலாக இருக்கலாம்.


Sun
அக் 23, 2025 17:32

மலேசியா ஆசியான் மாநாட்டில் டிரம்ப் கலந்து கொள்கிறார். டிரம்பை நேரில் சந்திக்க மோடி விரும்பவில்லை. அதனால் ஆசியான் மாநாட்டில் நேரில் கலந்து கொள்வதை தவிர்த்து காணொலி மூலம் கலந்து கொள்கிறார். இதுதான் உண்மைக் காரணமாக இருக்கக் கூடும். மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். மலேசியா பிரதமரும் இதை ஏற்றுக் கொண்டு மோடியின் சார்பாக நாசூக்காக வேறு காரணத்தை வெளியில் கூறுகிறார்.


ராமகிருஷ்ணன்
அக் 23, 2025 17:42

வரி போடும் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கூட இருக்கலாம்.


Perumal Pillai
அக் 23, 2025 17:23

It may be due to security concerns caused by potential American CIA assassins. A would-be CIA assassin was recently neutralized in Bangladesh by some unknown men friendly to India.


SANKAR
அக் 23, 2025 15:48

deepavali from October 26 to 28 again?!


Keshavan.J
அக் 23, 2025 18:19

What is your problem dravidiya fellow.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை